மொழி

இந்தியாவின் 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில்…!

  • ‘தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வி முடித்த பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், அங்கு அவர்கள் தரமான கல்வி பெறுகிறார்களா’ என்ற சந்தேகமும் கேள்வியும் நிறைய பேரிடம் இருக்கிறது. அதற்குப் பதிலளிக்கின்றன MHRD (Ministry of Human Resource Depratment) மற்றும் NIRF (National Institute Ranking Framework) ஆகிய அரசு நிறுவனங்கள் வெளியிட்ட தரவுகள். 
  • முதலில், MHRD தரவு. இதன்படி, இந்தியாவில் இருக்கும் 100 சிறந்த கல்லூரிகளில், மொத்தம் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதாவது, 37 சதவிகித கல்லூரிகள். இரண்டாவதாக, NIRF தரவு. இங்கே, நாடு முழுவதும் இருந்து மொத்தம் 860 கல்விநிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 182 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இப்போது சொல்லுங்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் தரமான கல்வி பெறுகிறார்கள் தானே!