தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 8 விமான நிலையங்கள்

  • ஒரு சமூகம் சரியான திசையில் முன்னேறியிருக்கிறதா என்பதை, அதன் ‘உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth)’ வைத்தே உண்மையாக உணர முடியும். தமிழ்நிலம் அதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. அதற்கு உதாரணம் தான், தமிழ் பிராந்தியத்தில் அனைத்து மண்டலங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கும் 8 விமான நிலையங்கள் (4 சர்வதேச விமான நிலையங்கள்). கிழக்கே சென்னை, நெய்வேலி, பாண்டிச்சேரி*, மேற்கே கோவை, சேலம், மத்தியில் திருச்சி, தெற்கே மதுரை, தூத்துக்குடி என பரந்துபட்ட அளவில் தமிழ்நாட்டில் விமானநிலையங்கள் இருக்கின்றன. 
  • ‘விமானநிலைய எண்ணிக்கையில் என்ன இருக்கிறது’ என்ற கேள்வி எழலாம். ஆனால், விமானநிலையங்கள் என்பவை ஒரு நிலத்தின் வளர்ச்சியின் அபாரமான குறியீடுகள். அதாவது, 8 விமானநிலையங்களை ஒரு நிலத்தின் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்கள் பொருளாதாரரீதியாக நல்ல வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள் என்று பொருள்.