மொழி

தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

  • ரத்தம் ஒரு உறுப்புக்கு மட்டும் அதிகமாகவோ அல்லது ஒரு உறுப்புக்கு மட்டும் குறைவாகவோ பாயுமானால், அந்த உடல் நல்லநிலையில் இல்லை என்று அர்த்தம். அதே போலத் தான் சமூகமும்! ஒரு சமூகத்தில், கண்டிப்பாக வளர்ச்சி என்பது எல்லா வர்க்கத்தினரையும் சென்று தொடுவதாக இருக்கவேண்டும். அதை அளவிடும் குறியீடே ‘Wealth Distribution’. இந்த ஏரியாவிலும்,தமிழ்நாட்டின் பங்களிப்பு ஆச்சர்யப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது!
  • இங்கே, தமிழ்ச்சமூகத்தை ‘அடித்தட்டு, கீழ் நடுத்தரம், நடுத்தரம், மேல் நடுத்தரம், மேல்தட்டு’ என மொத்தம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம். இதில், மேல்தட்டு வர்க்கத்தினருக்கான Wealth Distribution 22 சதவிகிதம் மட்டுமே. மீதமிருக்கும், 78 சதவிகித Wealth Distribution மேல் நடுத்தரத்தினர் (30.90 சதவிகிதம்), நடுத்தரத்தினர் (27.20 சதவிகிதம்), கீழ் நடுத்தரத்தினர் (15.3 சதவிகிதம்) மற்றும் அடித்தட்டினர் 4.60 சதவிகிதம்) ஆகிய நான்கு தரப்புக்குமானதாக தமிழ்நாட்டில் இருக்கிறது!
  • இந்த விகிதங்கள் அளிக்கும் இன்னொரு வரைபடம், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 60 சதவிகிதம் நடுத்தர வர்க்கத்தினர் இருக்கிறார்கள் என்பது. அதாவது, நடுத்தரம், மேல் நடுத்தரம் என இரு நடுத்தர பிரிவுகளையும் சேர்த்து 60 சதவிகிதம் வருகிறார்கள். இது மிகமுக்கியமானது! ஏனென்றால், பணக்காரர்கள் அதிகமாக இருப்பதால் அமெரிக்காவை நாம் ‘வளர்ந்த நாடு’ என்று அழைப்பதில்லை. மாறாக, அங்கே நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக இருப்பதாலேயே நாம் அப்படி அழைக்கிறோம். ஆக, தமிழ்நாடும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையை சீராக உயர்த்தி, இந்தியாவுக்குள் ஓர் அமெரிக்காவாக வளர்ந்து கொண்டிருக்கிறது!