மொழி

சாட்சிய சட்டம் – இந்தியாவின் முதல் சமூகநீதி நகர்வு

இந்திய சாட்சிய சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்தை முன்னிட்டு, தமிழ் வழக்கறிஞர்கள் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு பாடல் இது. செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மிகவும் எளிய வரிகள். ஆனாலும், மனதில் தைக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள்!

சாட்சிய சட்டம்!

இந்தியாவில் நிகழ்ந்த முதல் ‘சமூகநீதி’ நகர்வு என்று சாட்சிய சட்டத்தையே ( Indian Evidence Act, 1872) சொல்ல முடியும். அதுவரை இந்தியாவில் ‘சாதிநீதி’யே வழக்கத்தில் இருந்தது. ஒவ்வொரு சமூகமும் அவர்களின் குற்றங்களை அவர்களே விசாரித்து தீர்ப்பளித்துக் கொண்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு அந்த உரிமையும் இல்லை. அவர்கள் ஆதிக்கசாதி நாட்டாமைகளை வேண்டிநிற்க நிர்பந்திக்கப்பட்டார்கள். சில பெரிய நகரங்களில் மட்டும் நீதிமன்றங்கள் இருந்தன. ஆனால், அவையும் பஞ்சாயத்துகளின் தீர்ப்பையே அங்கீகரித்தன.

‘நீதி சமத்துவம்’ பெயரளவுக்குக் கூட இல்லை. அந்த நேரத்தில் தான் சாட்சிய சட்டத்தோடு காட்சிக்கு வருகிறார், நீதிமான் ஜேம்ஸ் ஃபிட்ஜேம்ஸ் ஸ்டீபன். ‘இனி இங்கே எல்லோருக்கும் ஒரே நீதி தான். அது சாதி நீதி அல்ல, சட்டத்தின் நீதி’ என்று அறிவிக்கிறார், அவர்.

1872 செப்டம்பர் மாதம் 1ம் தேதி, ஆங்கிலேயனின் அரசியல் சட்டமன்றத்தில் ( Imperial Legislative Council) சாட்சிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது! இந்திய நீதி தேவதையின் கையில் தராசு ஏறுகிறது!

யோசித்துப் பார்த்தால், நவீன இந்தியாவின் ஜனநாயக அடித்தளமும் கூட சாட்சிய சட்டத்தில் இருந்தே ஆரம்பமாவதாக தோன்றுகிறது. ஏனென்றால், எல்லோரையும் உள்ளடக்கி உருவாக்கப்படும் சட்டங்களே ஜனநாயகத்தின் ஆணிவேர். இந்தியாவில் அப்படி உருவாக்கப்பட்ட முதல் சட்டம், சாட்சிய சட்டமே!

சாட்சிய சட்டத்தில் மொத்தம் 11 பிரிவுகள். அவை அப்படியே இன்றும் நீடிக்கின்றன.

You can read those by clicking this link >> https://indiacode.nic.in/bitstream/123456789/6819/1/indian_evidence_act_1872.pdf