மொழி

பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம்

  • பெண்களுக்கான பாதுகாப்பான சமூக, பொருளாதார சூழலை, உலகிலேயே ஒரு முன்மாதிரி நிலமாக தமிழ்நாடு நிறைவேற்றிக்காட்டியிருக்கிறது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே சுதந்திரம் கிடைத்து 300 ஆண்டுகள் கழித்து தான், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ்நிலத்தில், சுதந்திரத்திற்கு முன்பே பெண்களுக்கு வாக்குரிமை சாத்தியமாக்கப்பட்டது. அதாவது, 1921ம் ஆண்டே அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மாகாணத் தேர்தல்களில் பெண்களும் பெருவாரியாக பங்களித்து வாக்களித்தனர். 
  • அடுத்து, பெண்களுக்கும் சொத்துரிமை சட்டம், பெண் சிசுக்கொலை தடுப்பு சட்டம், மகப்பேறு கால பலன்கள் சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டம், பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை உறுதிசெய்யும் சட்டம், பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதை தடைசெய்யும் சட்டம், ஆண் – பெண் பாலினப் பாகுபாட்டை உடைக்கும் சட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் சட்டம், ‘சதி (உடன்கட்டை ஏறுதல்)’ கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் என நிறைய சட்டங்களை அமல்படுத்தி, பெண் சமூகத்தை கண்ணென தற்காத்தது தமிழ்மண்!