மொழி

Idea பட்டறை' என்பது என்ன?

Idea பட்டறை’ என்பது  ஒரு நாள் நிகழ்வு. இது கலந்துரையாடல், பயிற்சி, பகிர்வு ஆகியவற்றின் கூட்டு உருவாக்கத்தில் நடக்கும்.  இந்த நிகழ்ச்சியில், உங்கள் ஸ்டார் அப் ஐடியாவை மெருகேற்ற பலதரப்பட்ட வழிகாட்டிகள், தொழில்வல்லுநர்கள், தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறுவதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். 

The objective of Idea பட்டறை.

உங்களுடயை ஒழுங்கற்ற, கரடு முரடான ஐடியாவை ஒழுங்குப்படுத்தி, அதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்த `Idea பட்டறை’யின் முக்கிய குறிக்கோளாகும். உங்களின் Idea ஒரு முழுமையான வடிவம் பெறுவதால் நீங்கள் முதலீட்டுக்கும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் தயாராகிவிடுவீர்கள். அதேபோன்று, உங்களுடைய சக Founding Members களையும் இதன் வழியே கண்டறிய முடியும்.

யார் இதில் பங்கேற்கலாம்?

தொழில்முனைவோராக விரும்புவர்கள், ஒரு ஸ்டார்ட் அப் ஐடியாவை உருவாக்கி, அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும். உங்களுடைய ஸ்டார்ட் அப் ஐடியா, உங்களை துங்க விடாமல் துரத்துகிறதா. இதை ஆரம்பிப்பதன் வழியே வெற்றிகரமான ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா, உங்களின் ஐடியாதான் உங்களது வாழ்க்கையின் இலக்காக இருக்கப்போகிறது என்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, உடனே பதிவு செய்யுங்கள்.உங்களுடைய ஸ்டார்ட் அப் ஐடியா, உங்களை துங்க விடாமல் துரத்துகிறதா. இதை ஆரம்பிப்பதன் வழியே வெற்றிகரமான ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா, உங்களின் ஐடியாதான் உங்களது வாழ்க்கையின் இலக்காக இருக்கப்போகிறது என்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, உடனே பதிவு செய்யுங்கள்.

Hosting & Mentoring By

Suresh Sambandam

Founder & CEO of Kissflow

Leading Software firm.

Convenor of Dream

Tamilnadu Organisation

- Member of Tamilnadu's State Planning commission for Industrial Transformation
- Member of Tamilnadu's "Future of IT"
advisory committee
- Tamilnadu State Investment
Brand Ambassador

ஐடியா பட்டறையில் நீங்கள் என்ன கற்றுக்
கொள்வீர்கள்?

உங்கள் ideal customer profile (ICP) சரியாக புரிந்துகொள்ளுதல் மற்றும் தேர்ந்தெடுத்தல்.
 உங்கள் ICP-ன் தேவைகள் மற்றும் விருப்பங்களில் ஆழமான தெளிவைப் பெறுங்கள்.
 ICP-க்கு உங்களது ஐடியாவின் தனித்துவமான மதிப்பை கொண்டு சேர்த்தல் (UVP) 
 உங்கள் தொழிலுக்கான வாய்ப்புகளையும் (Opportunities), மற்றும் அச்சுறுத்தல்களையும் (Threats) சரிபார்த்தல்.
 உங்களுடைய சந்தை அளவை புரிந்துகொள்ளுதல் (TAM / SAM / SOM)
 பொருளாதார அலகு (Unit Economics).
 உங்கள் Product pitch-ஐ ஒழுங்குப்படுத்துதல்.
 உங்களது pitch ஐ ஏழு நிமிடங்களுக்குள் விளக்குதல்.
 பிற founders உடன் நட்பை உருவாக்குதல்.
 உங்கள் சக தொழில்முனைவோர் மற்றும் வழிகாட்டி (Mentor) உடன் சேர்ந்து பணிபுரிய கற்றுக்கொள்ளுதல்.

நிகழ்ச்சி நிரல்

No.நேரம் நிகழ்ச்சி நிரலுக்கான விளக்கம்
012:00 – 2:30

Framework of an Ideal Pitch:

  1. உங்களது pitchல் என்ன இருக்க வேண்டும்?
  2. உங்களது pitch-யை எப்படி விளக்க வேண்டும்?
022:30 -2:45Case Study வழியாக கற்றல்.
உங்களது தொடக்கநிலை pitch, ஒரு வலிமையான pitch ஆக பரிணாம வளர்ச்சி அடைதலை இரண்டு நடைமுறை யதார்த்த எடுத்துக்காட்டுகளுடன் கூறுதல்.
032:45 -3:00கேள்வி – பதில்
043:00 -4:00பயிற்சி பட்டறைக்குத் தயாராகுதல்
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தலா 12 – 16 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படுவர். பின்னர், ஒவ்வொரு குழுவும் தங்களது தொழில்முனைவு ஐடியாவை மறுவரையறை செய்ய வேண்டும். முந்தைய அமர்வின் (Framework of an Ideal Pitch, Case Study வழியாக கற்றல்) கற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள சகாக்கள் (peers) மற்றும் வழிகாட்டிகளின் உதவியை பெறலாம்.
054:00 -5:30சகாக்களுக்குள் அறிமுகப்படுத்தல் (Peer Presentation)

ஒவ்வொரு குழுவும் சக குழுக்களுடன் மற்றும் அவர்களின் வழிகாட்டியின் அடிப்படையில் குழுவிற்குள் தங்கள் pitch-ஐ முன்வைத்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும். 

இந்த அமர்வின் முடிவில், ஒவ்வொரு குழுவும் தங்கள் குழுவிலிருந்து ஒரு ஸ்டார்ட் அப்பை இறுதிச்சுற்றில் பங்கேற்க வைக்கும்.

பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு (Working lunch) வழங்கப்படும்.

065:30 -6:30Nominee-யை வடிவமைத்தல்

ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் சிறந்த ஒரு ஸ்டார்ட் அப்பை பரிந்துரைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் pitch ஐ செம்மைப்படுத்தி, குறிப்பிட்ட நிறுவனத்தை காட்சிப்படுத்த வேண்டும்.

076:30 -6:50இறுதிச்சுற்றில் அறிமுகப்படுத்துதல்  (Final Presentation)
இறுதிசெய்யப்பட்ட pitch யையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் 4 நிமிடங்களுக்குள் விளக்குதல். 2 நிமிடங்களுக்கு கேள்வி-பதில் பகுதியாக இருக்கும்.
086:50 -7:00நிகழ்வை முடித்து வைத்து, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தல்.

விலைப் பட்டியல்

(உங்களுடயை ஒழுங்கற்ற, கரடு முரடான ஐடியாவை ஒழுங்குப்படுத்தி, அதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்த 'Idea பட்டறை'யின் முக்கிய குறிக்கோளாகும்.)​

Rs. 1999

ஒரு நபர் ஸ்டார்ட் அப் குழு

Rs. 2999

இருநபர் ஸ்டார்ட் அப் குழு

Rs. 3999

மூவர் ஸ்டார்ட் அப் குழு