மொழி

தமிழ்நாடு பணியாளர் ஆற்றல்

  • இந்திய ஒன்றிய அரசு, நமது பொருளாதாரத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கிறது. ஒன்று, விவசாயம் (Agri Sector). இரண்டு, தொழிற்சாலை (Industrial Sector). மூன்று, சேவை (Service Sector). 
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சேவைத்துறையில் தான் அதிகம் பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை 51 சதவிகிதம். மொத்தம், 1.67 கோடி பணியாளர்கள் சேவைத்துறையில் பணிபுரிகிறார்கள். சேவைக்கு அடுத்த இடத்தில், விவசாயம் 42 சதவிகித பங்களிப்புடன் இருக்கிறது. இங்கே, பணியாளர்களின் எண்ணிக்கை 1.38 கோடி. கடைசியாக, தொழிற்சாலைகளில் பணியாளர்களின் பங்களிப்பு 7 சதவிகிதமாக இருக்கிறது. இந்த 7 சதவிகிதத்தில், 24 லட்சம் பணியாளர்கள் அடங்கியிருக்கிறார்கள்!