மொழி

மாஸ்டர் ஸ்ட்ரோக் 1 – ஆரம்பக்கல்வி

  • சுதந்திர இந்தியாவின் முதல் இருபது ஆண்டுகளில், மிகப்பெரிய அளவில் ஆரம்பக்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியது தமிழ்நாடு. இந்தியாவின் பிற மாநிலங்களில் திண்ணைப்பள்ளிகள் கூட முறையாக அமைக்கப்படாத அக்காலகட்டத்தில், தமிழ்நாட்டில் கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி, பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி அளிக்கப்பட்டது!
  • இதற்கு முக்கியமாக பெருந்தலைவர் காமராஜருக்கு நன்றி சொல்லியாகவேண்டும். 1950ல் 6000 என்ற அளவில் இருந்த தமிழ்நாட்டுப் பள்ளிகளின் எண்ணிக்கையை, 1960க்குள் 27,000ஆக உயர்த்திக்காட்டினார், அவர். தரவுகளின் படி, அன்றைய தமிழ்நாட்டின் 77 சதவிகிதம் பிள்ளைகள் காமராஜரால் ஆரம்பக்கல்வி பெற்றனர். இதுவே, பின்னாளில் தமிழ்நாடு கல்விதளத்தில் அடைந்த அத்தனை வளர்ச்சிகளுக்கும் அடிப்படை.