மொழி

மாஸ்டர் ஸ்ட்ரோக் 4 – ஆங்கில அறிவு

  • கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியின் ஆணிவேர்களில் முக்கியமானது எது? கண்டிப்பாக, அது பேரறிஞர் அண்ணா சட்டமாக்கிய இருமொழிக்கொள்கை. ஏனென்றால், அந்தக் கொள்கை சட்டமான பிறகே, தாய்மொழியான தமிழை பாதுகாப்பதோடு, உலகமொழியான ஆங்கிலத்தையும் கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டில் அதிகரித்தது. அதன் விளைவாகவே, இன்று சென்னையில் உட்கார்ந்தபடி உலகின் முன்னணி நாடுகளில் வாடிக்கையாளர்களை உருவாக்கி தொழில் வளர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள், நம் இளைஞர்கள். 
  • அதே போல, ஆங்கிலம் என்பது வெறுமனே வணிகத்தை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை மட்டும் உருவாக்கிக் கொடுப்பதல்ல. அதையும் கடந்து, ஒரு அறிவுச்சுரங்கத்தையும் அது நம் இளைஞர்களுக்கு திறந்து வைக்கிறது. ஒப்புநோக்க, ‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் அரசியல், சமூக விவாதங்கள் நடக்கின்றன’ என்று சொல்கிறது ஒரு ஆய்வு. இதற்கெல்லாம் பின்னால் இருப்பது, அந்த ஆங்கில அறிவே!

[/vc_column_text][/vc_column][/vc_row]