மொழி

பண்டைய இலக்கியத்தில் தமிழ்நாடு

  • 1967ம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியதும், தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார், பேரறிஞர் அண்ணா. அப்போது ‘அதென்ன நாடுக்குள் இன்னொரு நாடு’ என்று எள்ளல்கள் எழுந்தன. அவை இன்றும் நின்றபாடில்லை. இப்போதும் கூட ‘தமிழ்நாடு’ என்ற பெயரை ஒரு உறுத்தலாகப் பார்க்கும் தரப்பினர் இங்கே இருக்கிறார்கள். ஆனால், பழங்காலந்தொட்டே தமிழ்மண் ஒரு தனித்தநாடாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதன் நில எல்லைகளும் கூட மிகச்சரியாக இலக்கியங்களில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 
  • மூன்று சான்றுகளைப் பார்ப்போம். ‘தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெலாம்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு கூறுகிறது. அடுத்து, தமிழர்களின் இணையற்ற காப்பியமான சிலப்பதிகாரத்தில், ‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய…’ என்ற வரி வருகிறது. அதே சிலப்பதிகாரத்தில் இன்னொரு இடத்தில், ‘தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற்’ என்றும் பாடப்படுகிறது. சிலப்பதிகாரம் இன்றிலிருந்து 1800 ஆண்டுகள் முற்பட்டது ஆகும்!