மொழி

தமிழ்நாட்டின் GER முன்னிலை வகிக்க இதுதான் காரணம்!

  • ஆண்களையும் பெண்களையும் சமமாக பாவித்து கல்வி அளிக்கும் சமூகமே, சீரான முன்னேற்றப்பாதையில் செல்லும். அந்த விதத்தில், தமிழ்நாட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. GER அளவீடுகளின் படி, தமிழ்நாட்டில் 49.8 சதவிகித ஆண்கள் பள்ளிக்கல்வியை முடித்துக்கொண்டு கல்லூரிக்கு செல்கிறார்கள். அதே போல, பெண்களில் 48.3 சதவிகிதத்தினர் கல்லூரிக்கனவை நனவாக்கிக் கொள்கிறார்கள். 
  • இது எப்படி சாத்தியமானது? இதற்கு நம் ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் என இருதரப்புக்குமே நாம் நன்றி சொல்லியாகவேண்டும். ‘எப்பாடு பட்டேனும் பிள்ளைகளை படிக்கவைத்து விட வேண்டும்’ என்று அவர்களின் மனதில் ஏற்பட்ட வேட்கையே, தமிழ்நாட்டில் பாலின பேதமற்ற GER முன்னிலையை சாத்தியமாக்கியது. ஆக, இனி ‘கல்வி வளர்ச்சியில் முதலிடம்’ என்று தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு நிகராக நெஞ்சம் நிமிர்த்தி சொல்லலாம்.