குற்ற மேலாண்மையில் தமிழ்நாடு முன்னுதாரண மாநிலம்

  • எந்த சமூகத்தில் குற்றவாளிகள் குறைவாக இருக்கிறார்களோ, அந்த சமூகமே மகிழ்ச்சியாக வாழும் சமூகமாகும். அந்த வகையில் பார்த்தால், தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற சொல்லத்தக்க நிலையை எட்டியிருக்கிறது. இங்கு, Jail Occupancy Rate எனப்படும் சிறைகளில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை விகிதம், மிகவும் கட்டுப்பாடாக இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் Jail Occupancy Rate வெறும் 63 சதவிகிதம் மட்டுமே. ‘இதென்ன பிரம்மாதமா’ என்று தோன்றலாம். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களின் Jail Occupancy Rate தமிழ்நாட்டை விட குறைந்தது 20 அல்லது 30 சதவிகிதம் அதிகமாகவே இருக்கின்றன. முக்கியமாக, தமிழ்நாட்டுடன் நிறைய அளவீடுகளில் இணைவைக்கப்பட்டு பேசப்படும் குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில், சிறைகளின் கொள்ளளவையும் கடந்து குற்றவாளிகளின் எண்ணிக்கை இருக்கிறது. அவர்களின் Jail Occupancy Rate இது… குஜராத் – 110 சதவிகிதம், உத்திரப்பிரதேசம் – 168 சதவிகிதம், மத்தியப்பிரதேசம் – 155 சதவிகிதம், மராட்டியம் – 153 சதவிகிதம்!
  • கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய மாநிலங்களாக பார்க்கப்படும் கேரளா மற்றும் கர்நாடகமும் கூட, குற்ற மேலாண்மையில் தமிழ்நாட்டை விட பின் தங்கியே இருக்கின்றன. அந்த இரண்டு மாநிலங்களின் Jail Occupancy Rate 110 சதவிகிதம் மற்றும் 101 சதவிகிதம் ஆகும்.