மொழி

சமூக, பொருளாதார திட்டங்கள் செயலாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்

  • சமூக, பொருளாதார திட்டங்களை சமச்சீராக மக்கள் மத்தியில் கொண்டுசென்று உண்டாக்கப்படும் வளர்ச்சியே, சரியான வளர்ச்சி. இந்த தளத்திலும், இந்தியாவின் மிகப்பெரிய 10 மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு முதலிடத்தில் வீற்றிருக்கிறது!
  • ஒரு மாநிலத்தின் சமச்சீர் வளர்ச்சியை அளவிட நமக்கு இருக்கும் நம்பகமான அளவுகோல், PAI எனப்படும் Public Affairs Index. அவர்கள் வெளியிட்ட தரவுகளின் படி,தமிழ்நாட்டின் எண் 0.782. தமிழ்நாட்டுக்கு அடுத்த இடத்தில் சத்தீஸ்கர் இருக்கிறது. அவர்களின் எண், 0.514. மூன்றாம் இடத்தில் இருக்கும் மேற்கு வங்கத்தின் எண், 0.378. குஜராத், மராட்டியம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எண்கள், நேர்நிலையில் (+) அல்ல, எதிர்நிலையில் (-) இருக்கின்றன.