மொழி

தொழிற்சாலை வேலைவாய்ப்பில் மராட்டியத்தை தூக்கி சாப்பிட்ட தமிழ்நாடு

  • தொழிற்சாலை என்பது வெறுமனே பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இடம் மட்டுமல்ல. அதைச் சுற்றி, ஒரு சமூகக் கட்டமைப்பு இருக்கிறது. ஒரு தொழிற்சாலை நூறு பேருக்கு வேலை தருகிறது என்றால், அந்த நூறு பேரைச் சார்ந்து இருக்கும் நானூறு பேர் பலனடைகிறார்கள். ஆகவே, தொழிற்சாலைகள் உருவாக்கும் வேலைவாய்ப்புகள் வளர்ச்சிக்கான அடித்தளமாக கொள்ளத்தக்கவை. 
  • தமிழ்நாடு தொழிற்சாலை வேலைவாய்ப்பில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது. மொத்தம் 24 லட்சம் தொழிற்சாலை வேலைகள் இங்கு இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மராட்டியத்தில், 20 லட்சம் வேலைகள் இருக்கின்றன. மூன்றாவதாக இருக்கும் குஜராத்தில் 18 லட்சம் வேலைகள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களெல்லாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப்பேசக் கூடிய அளவுக்கான சதவிகிதத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் 10 லட்சத்திற்கும் குறைவாகவே தொழிற்சாலை வேலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.