மொழி

அசைக்கமுடியாத தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு

  • கல்விக்கு அடுத்து ஒரு சமூகத்தின் வாழ்வியல் சூழலை அழகாக உணர்த்துவது, உடல்நலப் பாதுகாப்பு. இதை அளவிடுவதற்கான ஒரு அளவுகோலே IMR (Infant Mortality Rate) எனப்படும் கைக்குழந்தைகள் இறப்பு விகிதம். அடிப்படையில், ஒரு கைக்குழந்தையை நாம் இறக்கவிட்டாலுமே அது சோகம் தருவது தான். ஆனால், முடிந்தவரை இந்திய ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் குறைவான உதவிகளை மட்டுமே கொண்டு, தமிழ்நாடு கைக்குழந்தைகள் இறப்பு விகிதத்தை வெகுவாக கட்டுப்படுத்தியிருக்கிறது.
  • 2008 – 2016 வரையிலான 8 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் IMR அளவீட்டைப் பார்ப்போம். 2008ம் ஆண்டு தமிழ்நாட்டின் கைக்குழந்தைகள் இறப்பு விகிதம், ஆண்டுக்கு 31. ஆனால், அதை அப்படியே அடுத்தடுத்த ஆண்டுகளில் மெல்ல நிவர்த்தி செய்து, 2016ம் ஆண்டு 17ஆக நாம் கொண்டு வந்திருக்கிறோம். இதே நேரத்தில், இந்தியாவின் IMR விகிதத்தை அளவிடுவோம். அது, 2016ம் ஆண்டிலும் 34 என்ற அளவிலேயே நீடிக்கிறது.