மொழி

குஜராத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள்!

  • தொழில்வளர்ச்சி என்றாலே மராட்டியத்தையும், குஜராத்தையும் அடையாளம் காட்டும் போக்கு, இந்தியாவெங்கும் பரவலாக இருக்கிறது. ஆனால், உண்மையில், குஜராத், மராட்டியத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் இருக்கின்றன. 
  • தொழிற்சாலை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும், தமிழ்நாட்டின் தொழிற்சாலை எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அது, 38,000 ஆகும்! இந்த இடத்தில் இன்னொன்றையும் பார்க்கவேண்டும். அதாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத், மராட்டிய மாநிலங்களின் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை. அவர்களின் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, தமிழ்நாட்டை விட 11, 000 குறைவு!