மொழி

மணிமேகலை மோகன் (SSVM)

[vc_row][vc_column][vc_column_text]

  • கல்வித்துறையில் நிறைய புதுமைகளை செய்துவரும் பெண் தொழில்முனைவாளர், மணிமேகலை மோகன்! வெறும் 25 மாணவர்களுடன் 1998ம் ஆண்டு கோவையில் அவர் உருவாக்கிய SSVM கல்விநிறுவனம், இன்று 10,000 மாணவர்களுக்கு கல்வி அளித்து வருகிறது!
  • மணிமேகலை நவீனயுகத்தை சார்ந்த தொழில்முனைவாளர். ஆகவே, மரபான கல்விச்சூழலை எப்படியெல்லாம் மாற்றமுடியும் என்று மிக நன்றாக சிந்தித்து கல்வித்துறையில் இறங்கினார், அவர். முக்கியமாக, ‘நல்ல தனியார் பள்ளிகள் என்றாலே நகரத்தில் மட்டும் தான் இருக்கும்’ என்ற கதையாடலை உடைத்து நொறுக்கினார், மணிமேகலை. அவரது SSVM கல்வி நிறுவனங்கள் அனைத்துமே கிராமப்புற பகுதிகளில் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டன. இப்போது, நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி நல்ல கல்வியை தேடி வருகிறார்கள், எல்லோரும்!
  • ஒரு கல்விநிறுவனத்தின் முக்கியத்துவம், அதன் ஆசிரியர்கள் எப்படி பார்த்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதில் இருக்கிறது. அந்த விதத்தில் SSVM கல்வி நிறுவனம் ஒரு அற்புதமான தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, SSVM ஆசிரியர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வியை உறுதி செய்திருக்கிறார், மணிமேகலை மோகன்!
  • ‘பெண்கள் கோழையாக இருக்கக்கூடாது…’ என்பது மணிமேகலை எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடும் வசனம். அதற்குப் பின்னால் ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது. அதாவது, 1990களின் இறுதியில் ‘சிறுமுகையில் சி.பி.எஸ்.இ பள்ளி’ என்று மணிமேகலை சிந்திக்கும்போதே, அவருக்கு எதிர்ப்புகள் ஆரம்பித்துவிட்டன. அந்தப் பகுதியில் இருந்த சில மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகங்கள், ‘இதென்ன வெறும் 25 பேரை மட்டும் வைச்சு குடிசைத்தொழில் மாதிரி ஒரு ஸ்கூல்? நீங்க வேணா பாருங்க… சிட்ஃபண்ட் கம்பெனி மாதிரி இவங்க பணத்தை சுருட்டிட்டு ஓடிடுவாங்க…’ என்று, மணிமேகலைக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தன. ஆனால், ‘நான் கோழை அல்ல… இதை முறியடிப்பேன்…’ என்ற வார்த்தைகளை மனதுக்குள் ஒரு மந்திரம்போல ஓட்டிப் பார்த்து, வென்றார் மணிமேகலை.
  • மணிமேகலை மனவியல் படித்தவர். அவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டது. அவரது அக்காக்கள் இரண்டுபேரும் அமெரிக்கா, பெங்களூர் என இரண்டு பெரிய நகரங்களில் திருமணத்துக்குப் பிறகு செட்டிலாகி இருந்தனர். ஆனால், மணிமேகலை ‘அமெரிக்காவும் வேண்டாம், பெங்களூரும் வேண்டாம். தமிழ்நாட்டில் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்…’ என்று முடிவெடுத்து சிறுமுகைக்கு வந்து சாதித்தார்! 
  • தனியார் பள்ளிகளை சார்ந்தவர்களுக்கு எப்போதுமே அரசுப்பள்ளிகளின் மேல் ஒரு சிறுமைப்பார்வை இருக்கும். ஏனென்றால், அவர்களின் தொழிலுக்கு நிரந்தர எதிரிகள் அரசுப்பள்ளிகள். ஆனால், மணிமேகலை வித்தியாசமானவர். ‘தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல அரசுப்பள்ளி மாணவர்கள். திறமை, அறிவு, ஒழுக்கம் என எல்லாவற்றிலும் அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரானவர்கள்’ என்று சொல்வார், அவர்.
  • ‘What is the fact, say the fact’ என்ற வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர் மணிமேகலை மோகன். ‘கல்வி நிறுவனத்தில் நிறைய முதலீடு செய்திருக்கிறோம். நம்மைத்தேடி இன்னும் அதிக மாணவர்களும் பெற்றோர்களும் வரவேண்டும்’ என்பதற்காக, அவர் பொய் வாக்குறுதிகளை ஒரு கருவியாக பயன்படுத்துவதில்லை. ‘இந்த ஊர் வரை தான் எங்களின் பேருந்து இயங்கும… உங்களுக்கு வேண்டுமானால் வேறு வாய்ப்புகளை பாருங்கள்…’ என்று நேரடியாகவே சொல்லிவிடுவார், மணிமேகலை!
  • ‘Very successful lady…’ என்பது தான் மணிமேகலைக்கு கோவையில் இருக்கும் அடையாளம். ஆனால், அந்த ’Sucessful Lady’க்கு பின்னால், ஒரு ’Successful Man’ இருக்கிறார். அது, மணிமேகலையின் இணையர் மோகன்தாஸ். 1998ல் SSVM பள்ளி தொடங்க மணிமேகலையை ஊக்குவித்தவரும், மோகன்தாஸ் தான். அவர் கொடுத்த தைரியத்தில் தான் தொழில்முனைவில் அடுத்தடுத்த படிகளில் தைரியமாக கால்வைத்து முன்னேறினார், மணிமேகலை!
  • ‘அதென்ன உலகத்தர கல்வி? இனி எல்லோரையுல் தமிழ்நாடுதர கல்வி என்று சொல்லவைக்க வேண்டும்…’ என்பதே, மணிமேகலையின் கனவு. அதை நோக்கிய பயணத்தில் சமரசமே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார், மணிமேகலை!

[/vc_column_text][/vc_column][/vc_row]