மொழி

ஶ்ரீவித்யா

[vc_row][vc_column][vc_column_text]

  • ஆண்கள் மட்டுமே கோலோச்சும் பாதுகாவலர்கள் துறையில், கடினமான பாதைகளை கடந்து சாதித்த முதல் பெண் தொழில்முனைவாளர், ஶ்ரீவித்யா!
  • எந்தவொரு தொழில்முனைவு சாதனையும், சிறுவயதில் சிறிதாக மனதில் ஊற்றெடுத்த கனவின் வழியாகவே அடையப்படுகிறது. அந்த வகையில், பள்ளி பருவத்தில் போலீஸ் அதிகாரியாக மாறவேண்டும் என்று ஶ்ரீவித்யாவின் மனதில் தோன்றிய எண்ணமே, பின்னாளில் அவரை பாதுகாவலர்கள் நிறுவனத்தை உருவாக்க ஊக்குவித்தது!
  • ஆண்களின் வெற்றியைப்போல பெண்களின் வெற்றி சமூகத்தில் அவ்வளவாக ரசிக்கப்படுவதில்லை. எல்லோருக்கும் தெரிந்த அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் அப்படி நிறைய பெண் உதாரணங்கள் இருக்கிறார்கள். தொழில்முனைவில் அப்படிப்பட்ட உதாரணம் ஶ்ரீவித்யா. ’ஆரம்பத்தில் என்னுடைய வெற்றியை யாரும் அங்கீகரிக்கவில்லை. ‘கடின உழைப்பால் இவள் ஜெயித்தாள்…’ என்று ஒரு சொல் கூட எழவில்லை. ‘ஏதாவது தந்திரம் செய்து முன்னேறியிருப்பாள்…’ என்றே பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். ஆனால், நான் கொண்ட நல்ல நோக்கமும் பெரிய இலக்கும் என்னை தொடர்ந்து செயல்பட வைத்தது…’ என்பது, ஶ்ரீவித்யா வலியுடன் சொன்ன வார்த்தைகள்.
  • நிஜவாழ்க்கை குற்றங்களும், மெய்நிகர் குற்றங்களும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பாதுகாப்பின் அவசியம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார், ஶ்ரீவித்யா. முக்கியமாக, பெண்களின் பாதுகாப்புக்கும், முதியோர்களின் பாதுகாப்புக்கும் அவர் வழங்கும் முக்கியத்துவம் குறிப்பிட வேண்டியது.
  • தொழிலின் ஆரம்பகட்டத்தில், ஶ்ரீவித்யாவுக்கு மிகவும் பிரபல இருசக்கர நிறுவனத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது, ‘ஒரு பெண்ணை நம்பி பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைக்கும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை…’ என்று அவருக்கு பதில் சொன்னார்கள், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள்.  ஶ்ரீவித்யா அதைக் கேட்டு வெகுண்டார். ’உங்கள் நிறுவனத்தில் முதலாளியா பைக் தயாரிக்கிறார்? Entrepreneurs employ people. So will I’ என்று தைரியமாக சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினார் ஶ்ரீவித்யா. அடுத்து, L&T நிறுவனத்திலும் அவருக்கு அதே பதில் சொல்லப்பட்டது. ஆனால், ‘தைரியமாக பேசித்தான் அந்த இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தின் வாய்ப்பு பறிபோனது. அதனால் இம்முறை வளைந்துகொடுத்து பேசுவோம்’ என்று ஶ்ரீவித்யா நினைக்கவில்லை. மாறாக, இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் சொல்லிய அதே பதிலையே திரும்பவும் சொன்னார், அவர். இன்று, L&T, Cognizant போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள், ஶ்ரீவித்யாவின் ‘ரவீந்தரா சர்வீஸையே’ பாதுகாப்பு பணிக்கு நம்பியிருக்கிறார்கள். 
  • ஶ்ரீவித்யாவின் நிறுவனம் இப்போது வெறும் பாதுகாவலர்களை நியமிக்கும் நிறுவனம் மட்டுமல்ல. அதையும் தாண்டி, வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளையும், அவரது நிறுவனம் அளித்து வருகிறது. ஆண்டு வருமானமும் பல கோடிகளை எட்டியிருக்கிறது.
  • முற்றிலும் ஆண்கள் சூழ்ந்த உலகு, ஶ்ரீவித்யாவுடையது. அது நிறைய குரூரங்களை அவர் வாழ்க்கையில் நிகழ்த்தியது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண் பாதுகாவலர்கள் பலர், நள்ளிரவுகளில் அவருக்கு கால் செய்து தவறாக பேசுவார்கள். அவர் வெளியே நடந்துவரும் போது தவறாக கமெண்ட் செய்வார்கள். இதையெல்லாம், தைரியம் என்ற ஒற்றைச்சொல்லைக் கொண்டு தாண்டினார், ஶ்ரீவித்யா.
  • பெண் பாதுகாவலர்களை வளர்த்தெடுத்து, முற்றிலும் அவர்களை மட்டுமே கொண்ட ஒரு பாதுகாப்பு அணியை உருவாக்கவேண்டும் என்பது ஶ்ரீவித்யாவின் கனவு!
  • ‘ஆணைவிட பெண் குறைந்தவள் என்று எப்போதும் நினைக்காதீர்கள். ஆணுக்கு இருக்கும் அதே அறிவு, தைரியம், தன்னம்பிக்கை பெண்ணுக்கும் இருக்கிறது. விடாமல் போராடுங்கள்…’ என்பதே, சாதிக்க துடிக்கும் பெண் தொழில்முனைவாளர்களுக்கு ஶ்ரீவித்யா வழங்கும் அறிவுரை.
  • Emerging India சார்பில் வழங்கப்படும் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதை, 2012ம் ஆண்டு பெற்றார், ஶ்ரீவித்யா!

[/vc_column_text][/vc_column][/vc_row]