மொழி

மொத்த உற்பத்தி திறன், தொழிற்சாலை, தொழிற்சாலை வேலைவாய்ப்புகள்… தமிழ்நாடு Top in All!

  • நிலக்கரி போன்ற கனிமவளங்கள் இல்லை. ஆண்டில் பாதிமாதங்கள் நதிநீர் பற்றாக்குறை. ஆனாலும், தமிழ்நாடு பொருளாதாரத்தில் வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
  • பொருளாதாரத்தை அளவிட நம்மிடம் மூன்று முக்கிய அளவீடுகள் இருக்கின்றன. ஒன்று, மொத்த உற்பத்தி திறன். இரண்டு, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை. மூன்று, தொழிற்சாலைகளின் மூலம் உருவாகும் வேலைகள். இந்த மூன்றிலுமே தமிழ்நாடு முன்னணி எண்களை பெற்றிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த உற்பத்தி திறன் (GDP) 260 பில்லியன் டாலர்களாகும். ரூபாய் மதிப்பில் 18 லட்சம் கோடி. இது இந்தியாவிலேயே இரண்டாவது இடம்! அடுத்து, தொழிற்சாலைகள். இதிலே, தமிழ்நாடு நெம்பர் 1. இங்கே, 38,000 தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மராட்டியத்தில் 28,000 தொழிற்சாலைகளே இருக்கின்றன. இறுதியாக, தொழிற்சாலை வேலைகள். இதிலும் தமிழ்நாடு தான் முதலிடம். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 24 லட்சம் தொழிற்சாலை வேலைகள் இருக்கின்றன.