உயர்கல்வியில் அமெரிக்காவை விஞ்சிய தமிழ்நாடு!

  • பொதுவாக, ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் கல்வி வளர்ச்சி எப்படியிருக்கிறது என்பதை அறிய ‘Literacy Rate’ அளவுகோலை பயன்படுத்துவார்கள். ஆனால், ‘Literacy Rate’ என்பது ஒரு மாயையான தரவு. அதில், ஒருவருக்கு கையெழுத்து போடத்தெரியும் என்றாலே, ‘கல்வி கற்றவர்’ என்று அடையாளப்படுத்தி விடுவார்கள். எனவே, ‘Literacy Rate’ அளவுகோலை தவிர்த்துவிட்டு, கல்வி வளர்ச்சியை மதிப்பிட Higher Educaiton GER (Gross Enrollment Ratio) எனும் உயர்கல்வி சேர்க்கை எண்ணிக்கையை அளவிடுவதே சரியானதாக இருக்கும்! அதாவது, ஒரு சமூகத்தில் எத்தனை மாணவர்கள் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு, உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்பதே GER. இதை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வை எட்டியிருக்கிறது.
  • தமிழ்நாட்டில் தற்போதைய (2020) GER 49 சதவிகிதம். இது, வளர்ந்த வல்லரசு நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவின் GER விகிதத்தை விட 8 சதவிகிதம் அதிகமாகும். அதே நேரம், இந்தியாவின் GER இப்போது தான் 26 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது.