Ideology_Samooganeethi

“சமூக சுதந்திரமே உண்மையான சுதந்திரம்” – அண்ணல் அம்பேத்கர்

 • பாகுபாடுகள் நிறைந்த ஒரு சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதிகப்படியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே சமூக நீதியின் அடிப்படை. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகிய மூன்றிலும் தனி உரிமை வழங்கப்பட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழுவதற்கு குறைந்தது இருநூறு ஆண்டுகளாவது தேவைப்படும். அதுவரை, அவர்களுக்கான சமூக நீதியை நாம் தொடர வேண்டும்.
 • எண்ணிக்கையில் மட்டுமில்லாமல் அறிவு, செயல்திறன் போன்றவற்றிலும் ஆண்களுக்கு நிகராக இருப்பவர்கள் பெண்கள். ஆனால், சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் போன்ற வெற்று காரணங்களைச் சொல்லி, அவர்களை வீட்டுக்குள் முடக்கி வைக்கவே நாம் விழைகிறோம். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கூட பெண் என்பவள் ஆண்களுக்கு பணிவிடைகள் செய்ய படைக்கப்பட்டவள் எனும் எண்ணமே சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது. திரைப்படங்களில் இருந்து தொலைக்காட்சித் தொடர்கள் வரை அதையே நாம் உட்புகுத்தி வைத்திருக்கிறோம். இது மிகப்பெரிய அநீதி. பெண்கள் ஒன்றும் ஆண்களின் வசதிக்கேற்ப வளைந்துகொடுக்கும் பொம்மைகள் அல்ல. அவர்கள் உயிர்கள். சமூகத்தில் ஆண்களுக்கு நிகராகவே அனைத்தையும் அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளையும் பிரதிநிதித்துவதையும் வழங்கி முன்னுக்கு கொண்டுவரவேண்டும்.
 • சமூகம் என்பது எல்லோரும் சேர்ந்தது தான். எனவே, சமூக நீதி என்பதும் எல்லோரையும் கணக்கில் கொள்வதாகவே இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தோரை நாம் அதிகம் கணக்கிலெடுத்து திட்டங்கள் வகுப்பதில்லை. சில திட்டங்கள் இருந்தாலும், அது முழுமையாக எல்லோருக்கும் சென்று சேர்வதில்லை. கனவுத் தமிழ்நாடு இயக்கம் அதை களையும். சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும் தொடும் திட்டங்களை நாம் வகுப்போம். அதன்மூலம், தமிழ்ச்சமூகத்தில் எந்த நபருமே தனித்துவிடப்பட்டவரில்லை என்ற நிலையை நாம் உருவாக்குவோம்.
 • பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமூக நீதிக்கு விரோதமானதாகும். ஏனென்றால் இட ஒதுக்கீடு என்பது பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ‘அரசு’ திட்டமல்ல. அது உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட சமுதாயங்களை மேலே கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ‘மக்கள்’ சட்டம். எனவே, ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலால் உருவாகி வரும் ஒரு தற்காலிக அரசு, அதை மாற்றிவிட முடியாது. இப்போது அல்ல, எப்போதுமே இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை திணிப்பதை  `கனவு தமிழ்நாடு இயக்கம்’ எதிர்க்கும்!
 • ‘இட ஒதுக்கீடு’ மட்டுமே சமூக நீதி அல்ல. சாதி என்பது ஒரு சமூக நோய். அதன் தீவிரத்தை தற்காலிகமாகக் குறைக்கும் வலி நிவாரணியே இட ஒதுக்கீடு. அதுவே தடுப்பு மருந்து அல்ல! ஆனால், ஏற்றாத்தாழ்வும் பாகுபாடும் இல்லாத ஒரு அறம் சார்ந்த சமுதாயமே நம் இறுதி இலக்கு. அதை இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி திட்டங்களின் வாயிலாகவே நாம் அடையமுடியும்.
 • அதே போல, சமூக நீதி என்பது சாதி, மத, இனத்தின் அடிப்படையில் வழங்கப்படும் `சலுகை’களும் அல்ல. அது, ஒடுக்கப்பட்டவர்களின் ‘உரிமை’! இரண்டாயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம், இயல்பாகவே சமூக நீதியை அடையும் உரிமையை பெற்றுவிடுகிறது. அதை ஒரு சலுகையாக நாங்கள் அவர்களுக்கு வழங்கினோம் என்று எவரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், ஒடுக்கப்பட்டவர்களின் சுயமரியாதையை அவமதிக்கிறோம் என்றே அர்த்தம்!
 • சமூக நீதி எந்தவிதத்திலும் `தரத்திற்கு (Merit)’ எதிரானது அல்ல. உண்மையில் சமூக நீதியால் பலன் பெற்று மேலே வந்தவர்களே இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். சிறந்த உதாரணம் அண்ணல் அம்பேத்கர்! சமூக நீதியில் பற்றுகொண்ட பரோடா அரசர் சாயாஜிராவ் கெய்க்வாட் அளித்த உதவித்தொகையின் மூலமே அம்பேத்கர் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளை முடித்தார். இன்று அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே இந்தியா புனித நூலாக கொண்டிருக்கிறது. உலகிலேயே நெடியதும் நேர்மையானதுமான மகத்தான அரசியல் சட்டம் அது! அதை உருவாக்கிய அண்ணல் சமூக நீதியால் வந்தவர்! இதுபோல ஆயிரம், லட்சம், கோடி பேரை கைக்காட்ட முடியும். எல்லோருமே இந்தியச் சமூகத்தை சிறிதளவேனும் முன்னால் நகர்த்தியவர்கள். ஆகவே, சமூக நீதி தரத்தைப் பாதிக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை கனவுத் தமிழ்நாடு இயக்கம் ஏற்காதது மட்டுமல்ல, அதைத் தகர்த்து எறியும்.
 • சமூக நீதியின் உண்மையான உள்ளடக்கம் என்பது ‘சமச்சீர் வளர்ச்சியை (Inclusive Growth)’ அடைவது தான். அதாவது, ஆயிரம் பேரை பத்துபடிகள் முன்னேற்றுவதை விட, லட்சம் பேரை ஒரு படி முன்னேற்ற வேண்டும். இதனால், பணக்காரன் இன்னும் பணக்காரனாவது தடுக்கப்பட்டு, அடித்தட்டு மக்கள் நிறைய பேர் நடுத்தரவர்க்க மக்களாக மாற்றம் பெறுவார்கள். இதுவே கனவுத் தமிழ்நாடு இயக்கத்தின் உச்சபட்ச சமூக நீதி இலக்கு!

Ideology-09

“அதிகாரம் கயமைக்கு வழிவகுக்கிறது. அதிக அதிகாரம் அதிக கயமைக்கு வழிவகுக்கிறது…” – லார்ட் ஆக்டன்

 • இந்தியா ஒரு வித்தியாசமான நாடு! உலகிலுள்ள பெரும்பாலான  நாடுகள்  ஒற்றைக் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கையில், இந்தியா மட்டுமே பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 28 வகையான கலாச்சாரங்களை நம்மால் காணமுடியும். அவை ஒவ்வொன்றும், அவற்றுக்கே உரித்தான மொழி, பண்பாடு, உணவு , உடை, இறைவழிபாடுகள் என தனித்துவத்துடன் திகழ்கின்றன. கலாச்சாரம் மட்டுமல்ல, அந்த மாநிலங்களில் இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் அங்கு வாழும் மக்களின் தேவைகளில் கூட நிறைய வேறுபாடுகளை உணர முடியும். உதாரணமாக, இந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டில் காவிரி நீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அதே, வடகோடியிலுள்ள உத்திரப் பிரதேசத்தில் கங்கை வெள்ளப்பெருக்கால் மக்கள் துயருறுகிறார்கள். தமிழ்நாட்டில் நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் குறைவு. ஆனால் பீகார் மாநிலத்தில் அவை மிக அதிகம். இந்தப் பன்மைத்துவத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் பாதுகாப்பதே ‘கூட்டாட்சித் தத்துவம்’!
 • கூட்டாட்சியில் இரண்டு முக்கியமான வகைகள் இருக்கின்றன. ஒன்று, இரட்டைக் கூட்டாட்சி (Dual Federalism), இரண்டு, ஒருங்கிணைவு கூட்டாட்சி (Cooperative Federalism). மத்திய அரசிடம் அதிக அதிகாரமும், மாநில அரசுகளிடம் குறைவான அதிகாரமும் இருப்பது இரட்டைக் கூட்டாட்சி. ஆனால், மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டிடமும் சம அளவில் அதிகாரம் இருப்பது ஒருங்கிணைந்த கூட்டாட்சி. கனவுத் தமிழ்நாடு இயக்கம் ‘ஒருங்கிணைந்த கூட்டாட்சி’யை இலக்கு வைத்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 • ஒருங்கிணைந்த கூட்டாட்சியின் முக்கிய அம்சம், மாநிலங்களின் ‘சுயநிர்ணய’ உரிமை! இந்தியாவை ஒரு நவீன ஜனநாயக நாடாக வளர்த்தெடுத்த ஜவகர்லால் நேரு பெரும் நாயகர் தான். அவராலேயே இங்கு மொழிவாரி மாநிலங்கள் அமைந்தன. ஆனால், அவருமே ‘வலுவான மத்திய அரசு’ என்பதில்தான் நம்பிக்கை வைத்திருந்தார். நேருவே அப்படியென்றால், அதற்குப்பிறகு வந்தவர்களை சொல்லவே வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவராக மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து மொத்தமாக மத்தியில் குவித்துக்கொண்டார்கள் (Centralized). இப்போது கல்வி, மருத்துவம், வரிகள் என எதுவுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை.
 • உண்மையில், இந்தியாவில் மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாக அமைப்புகள் அல்ல. அவை தனித்த தேசிய இனங்கள் வாழும் நிலப்பகுதிகள். நேரடியாக சொன்னால், அவை எல்லாமே இந்தியா எனும் பெரிய நாட்டுக்குள் இருக்கும் சிறிய நாடுகள். இதைப் புரிந்துகொண்ட ஒரு மத்திய அரசை நாம் உருவாக்கவேண்டும். அந்த மத்திய அரசின் கொள்கை வரைவில் ‘ஒருங்கிணைந்த கூட்டாட்சி’ எனும் பதத்தை நாம் சேர்க்க வேண்டும். எழுபது ஆண்டுகளாக நாம் இழந்த அத்தனை உரிமைகளையும், அந்த ஒற்றைப் பதம் நமக்கு மீட்டளிக்கும். அதன் பிறகு, ஒரு பிரதமருக்குண்டான அதிகாரத்துடன் மாநிலங்களின் முதலமைச்சர்கள் வலம் வருவார்கள்.
 • கூட்டாட்சியை பிரிவினைப் பார்வையோடு எவரும் பார்க்க வேண்டியதில்லை. நாம் மத்திய அரசிடம் கேட்பது சுயநிர்ணய உரிமையே தவிர, சுதந்திரம் அல்ல! உலகுக்கு இது புதிதும் அன்று. ஏற்கனவே, அமெரிக்காவில் ‘சுயநிர்ணய உரிமை’ கொண்ட மாநிலங்கள் தான் இருக்கின்றன. அங்கே, ஒரு மாநிலத்துக்கான சட்டத்தை அந்த மாநிலமே இயற்றிக்கொள்ளும் வகையில் வலுவான கூட்டாட்சி அமைப்பு நீடிக்கிறது. இந்திய மாநிலங்களையும் அப்படியொரு நிலை நோக்கி நகர்த்துவதே கனவு தமிழ்நாடு இயக்கத்தின் இலக்கு. So, our federalism is not exclusive. It is inclusive!
 • இந்தியாவில் கூட்டாட்சிக்காக போராடியதில் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. இந்திய மாநிலம் ஒன்றில், தேசியக்கட்சி அல்லாத ஒரு பிராந்திய கட்சியின் ஆட்சி முதன்முதலில் அமைந்தது இங்கே தான். ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கமும் தமிழ்நாட்டில் தான் முதலில் எழுந்தது. இந்த மரபை அடியொற்றியே கனவுத் தமிழ்நாடு இயக்கமும் கூட்டாட்சி தத்துவத்தைப் பேசுகிறது. ஆனால், அரசியலுக்காக சமரசம் செய்யாத ஒரு மகத்துவமான லட்சியத்தை கனவு தமிழ்நாடு இயக்கம் கொண்டிருக்கிறது.
 • மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகள் சுய நிர்ணய உரிமையை பெறுவது மட்டுமே கூட்டாட்சி ஆகி விடாது. அதற்கு, மாநில அரசுகளும் சுய நிர்ணய உரிமையை கிராமங்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் அதிகாரத் தன்னிறைவு பெற்றால் மட்டுமே உண்மையான கூட்டாட்சி இங்கே சாத்தியமாகும்.
 • ஒரு கை ஓசை எழுப்பாது. எனவே, கூட்டாட்சித் தத்துவம் குறித்த விழிப்புணர்வை இந்தியாவின் பிறமாநிலங்களிலும் ஏற்படுத்த, ‘கனவு தமிழ்நாடு இயக்கம்’ உறுதி கொண்டிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அது மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படும்!
Ideology-07

“மதச்சார்பின்மை என்பது மதமற்றத்தன்மை அல்ல. அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவதும், அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுமே ஆகும்” – நேரு.

 • இந்தியா மதங்களின் பூமி. இந்தியா அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் மதம் கலந்திருக்கும் இன்னொரு நாடு உலகத்தில் இல்லை. இங்கே பெரிதும் ஆதிக்கம் செலுத்துபவை இரண்டு வகை மதங்களே. ஒன்று தொகுப்பு மதம். இன்னொன்று தீர்க்க தரிசன மதம். தொகுப்பு மதத்திற்கு இந்து மதம்தான் சிறந்த உதாரணம். தீர்க்க தரிசன மதத்திற்கு கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம், புத்தம் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். இத்தனை மதங்களுமே இந்திய மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இதை உணர்ந்துதான் நம்முடைய பெரியோர்கள் இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை மிகக் கவனமாக வடிவமைத்தார்கள். அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
 • இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே எப்போதும் இருக்கும்.
 • இந்தியாவின் ஆட்சியாளர்களும் மதச்சார்பற்றவர்களாகவே இருப்பார்கள்.
 • ஆனால், மதத்தின் சீர்கேடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதை இந்திய ஆட்சியாளர்கள் முக்கிய கடமையாகக் கொண்டிருப்பார்கள்.
  இதையே கனவு தமிழ்நாடு இயக்கமும் முன்மொழிகிறது. இந்து மத சீர்திருத்த மசோதாவை அமல்படுத்திய அம்பேத்கர், நேரு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை ஏற்படுத்திய கலைஞருமே கனவு தமிழ்நாடு இயக்கத்தின் முன்மாதிரி மதச்சார்பின்மையாளர்கள்!
 • எந்த சூழ்நிலையிலும் சிறுபான்மை மதத்தினரை `கனவு தமிழ்நாடு இயக்கம்’ கைவிடாது. சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் நடவடிக்கை எந்த வடிவில் எடுக்கப்பட்டாலும் நாம் அதைத் தடுப்போம் மற்றும் தகர்ப்போம். இது மதச்சார்பின்மை கொள்கையை முன்னிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு நாம் அளிக்கும் அழியா வாக்குறுதி!
 • மதச்சார்பின்மை எனும்போது மதங்களின் பண்பாட்டு பன்மைத்துவத்தை மதிப்பதும், காப்பதும் கூட அதில் அடங்கும். உதாரணத்துக்கு, இங்கே நாம் ஒரு கணவன் ஒரு மனைவி எனும் கலாசாரத்தை பின்பற்றுகிறோம். ஆனால் சில வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெண் ஐந்து கணவர்களை கூட திருமணம் செய்து கொள்ளும் கலாசாரம் நடைமுறையில் இருக்கிறது. நமக்கு நம் கலாசாரம் பெரிது என்றால் அவர்களுக்கு அவர்களின் கலாசாரம் பெரிது. ஆகவே, அதை மதிக்கவும் காக்கவும் வேண்டியது அவசியம்.
 • சகோதரத்துவமே மதச்சார்பின்மையின் ஆணி வேர். தமிழ்நாடு அதில் மிகவும் முன்னோடி மாநிலம். இங்கே ராவுத்தர் வீட்டு பிரியாணி ரமேஷ் வீட்டுக்கு வரும். ரமேஷ் வீட்டு கட்டுச்சோறு ராவுத்தர் வீட்டுக்குப் போகும். மரியம்மாவை வணங்கும் மாரியம்மாவும் இங்கே உண்டு. மாரியம்மாவை வணங்கும் மரியம்மாவும் இங்கே உண்டு. இந்த அழகான சகோதரத்துவத்துக்கு எந்த அச்சுறுத்தல் வந்தாலும் `கனவு தமிழ்நாடு’ இயக்கம் எதிர்த்து குரல் கொடுக்கும்!
 • ‘மதச்சார்பு’ என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய எதிரி. அது மனிதர்களை பிரித்துப்பார்க்கவும் அடக்கி ஆளவும் ஆட்சியாளர்களைத் தூண்டுகிறது. எனவே, சமூகத்தில் ஒரு  பொருளாதார வேறுபாட்டு தன்மை உருவாகிறது. ஆகவேதான், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிவகை செய்யும் மதச்சார்பின்மை கொள்கையை `கனவு தமிழ்நாடு இயக்கம்’ உயர்த்திப் பிடிக்கிறது.
 • ‘மனிதமே’ கனவு தமிழ்நாடு இயக்கத்தின் கடவுள் கோட்பாடு! மனிதனை சாதியாகவோ, மதமாகவோ, இனமாகவோ பார்க்காமல், மனிதனாக மட்டுமே பார்க்கும் எவரும் கனவு தமிழ்நாடு இயக்கத்தை அவர்களின் இயக்கமாக வரித்துக் கொள்ளலாம்!
Ideology-08

“எருக்கம் பூவை மல்லிகை என்றால் எப்படி ஏற்போம்?” – அறிஞர் அண்ணா

 • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டது ‘Protect Tamil, Promote English’ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையே ஆகும்! இதை, எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் ‘கனவு தமிழ்நாடு’ இயக்கம் பேணிக்காக்கும்.
 • தமிழ் நம் தாய்மொழி! மட்டுமல்லாமல், தொன்மையான மற்றும் பண்பாட்டு அளவிலும் மேம்பட்ட மொழி. ஆகவே, அது நம் உயிர்மொழி மற்றும் முதல்மொழியாக இருக்கிறது!
 • ஆங்கிலத்தை நாம் இரண்டாவது மொழியாகக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அது தான் இன்றைய உலகின் இணைப்பு மொழி. இயல்பாக அந்த இடத்தை ஆங்கிலம் அடைந்துவிட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்காமல் உலகத்தோடு போட்டிபோட முடியாது என்பதே உண்மை நிலை. அனைத்து நாடுகளின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் தகவல்களும் கூட ஆங்கிலத்தில் தான் மொத்தமாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆகவே, அது ஓர் அறிவைத் திறக்கும் சாவி. இதையெல்லாம் அறிந்துதான் அண்ணா இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவந்தார். இன்றைய தமிழ்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு (Information Technology) அதுவே அடித்தளம். நிலைமை இப்படியிருக்க, நாம் ஏன் இந்திக்கு இடம் கொடுக்க வேண்டும்?
 • தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கும் நாம் இருமொழிக் கொள்கையையே பரிந்துரைக்கிறோம். ஏனென்றால், இந்தியாவின் மாநிலங்களுக்கு என்று தனித்த மொழிகள் இருக்கின்றன. அவைகளின் முக்கியத்துவத்தை ஏற்கனவே இந்தி பெரும்பாலும் குறைத்துவிட்டது. பல மாநில மக்கள் இந்தியால் அவர்களின் அடையாளத்தை இழந்துள்ளனர். இருமொழிக் கொள்கை மூலம் நம்மால் அந்த மாநில மொழிகளையும், அவர்களின் அடையாளங்களையும் மீட்டெடுக்க முடியும்.
 • ‘தேசத்துக்கு ஒரு அலுவல் மொழி தேவை’ என்று வரும்போது ஆங்கிலமும் மாநில மொழிகளுமே போதுமானவை. தகவல் பரிமாற்றமே நமக்கு முக்கியம். அதை நம்மால் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளின் மூலமே நிகழ்த்த முடியும். இந்திக்கு இங்கு எந்த பங்களிப்புமே இல்லை. பிராந்திய மக்களுக்கு அது வீண் சிரமத்தையே ஏற்படுத்தும். Niti Aayog என்பதை விட, Planning  Commission என்பது நன்றாகவே புரிகிறது தானே!
 • நமக்கு தாய்மொழி தமிழ் முக்கியம். உலகத்தோடு உறவாட ஆங்கிலம் முக்கியம். அதே நேரத்தில், பிற மொழிகளை கற்பதற்கான சூழலையும் சுதந்திரத்தையும் நாம் உறுதிபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழி கற்கும் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
 • ஆங்கிலம் அளவுக்கு தமிழை நவீனமயப்படுத்தும் கடமையை “கனவு தமிழ்நாடு இயக்கம்” ஒரு தொலைநோக்கு இலக்காகக் கொண்டிருக்கிறது. இது பெரும் லட்சியம். அண்மைக்காலத்தில் சீனர்கள் அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். சரியான முயற்சிகளை மேற்கொண்டால் நாமும் சாதிப்போம்.
Ideology-10

“பூமியால் நமது `தேவையை’ பூர்த்தி செய்ய முடியும். ஆனால், நமது `பேராசையை’ பூர்த்தி செய்ய இயலாது.” – மகாத்மா காந்தி.

 • இந்தியா இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. இங்கே அடர் வனமும் இருக்கிறது. அனல் கொதிக்கும் பாலையும் இருக்கிறது. இந்த ‘சுற்றுச்சூழல் பன்மைத்தன்மை (environmental diversity)’யை நாம் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்!
 • இந்தியாவின் இயற்கை வளம் பெரு நிறுவனங்கள் மற்றும் சில சுயநல அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டுக்கொண்டே வருகிறது. இப்படியே போனால் வரும் தலைமுறைக்காக நாம் விட்டுவைக்கும் இந்தியா வெறும் பாழ்நிலமாகவே இருக்கும். இதைத் தடுக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஓர் அரசியல் சமூக இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கனவு தமிழ்நாடு இயக்கம் அதில் முன்னிற்கும்!
 • இயற்கை வளத்தின் உயிர்நாடி காடுகள். காடுகளின் உயிர்நாடி அங்கு வாழும் விலங்குகள். விலங்குகளைக் காப்பதன் மூலமே நாம் காடுகளை உயிரோட்டத்துடன் வைத்திருக்க முடியும்.
 • பெரு நிறுவனங்களால் மட்டும் காடுகள் அழிக்கப்படுவதில்லை. வரலாற்றைப் பார்த்தால் விவசாய நிலங்களை விரிவுபடுத்தவே நிறைய காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இனிமேல், காடுகளை அழித்து விவசாய நிலங்கள் உருவாக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.
 • காடுகளை காப்பாற்றுவது போலவே கடலைக் காப்பாற்றுவதும் முக்கியம். ஏனென்றால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பெரும் பகுதியை (~80%) கடல் வாழ் தாவரங்களே உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் பார்த்தால் கடல் நமக்கு ஒரு பேரன்னையைப் போல. அவளது மடியில் பிளாஸ்டிக் குப்பைகளையும் தொழிற்சாலைக் கழிவுகளையும் நிரப்பி, பாழ்படுத்தி வருகிறோம். அவள் அழிவது என்பது அவள் அரவணைப்பில் வாழும் நாமும் அழிவதே. ஆகவே, கடல் வளத்தைக் காப்பதை ஒரு ஒப்பில்லா சூழல் பணியாக கனவு தமிழ்நாடு இயக்கம் கருதுகிறது. அதற்காக கடினமாக உழைக்கவும் தயாராக இருக்கிறது.
 • சுற்றுச்சூழல் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது நமது முக்கிய இலக்கு. உதாரணத்துக்கு ‘கார்பன் டிரேடிங்’ என்பது இன்று உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்திருக்கும் ஒரு புதிய சுற்றுச்சூழல் தொழில்முறை ஆகும். இது போல நிறைய தொழில்வாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை அடுத்த தளத்திற்கு (Next Phase) எடுத்துச் செல்வோம்.
 • நீர் என்பது பொதுச் சொத்து. அது அனைத்து மக்களுக்குமே பயன்பட வேண்டும். அப்போது தான் இங்கே ஒரு ‘நீர் சமத்துவம்’ உருவாகும்! நிலத்தடி நீருக்கென்று தனியொரு கொள்கையை உருவாக்க வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். நிலமும் பணமும் இருந்தால் பூமியை துளைத்து, எவ்வளவு நீர் வேண்டுமானாலும் எடுக்கலாம் எனும் நிலை மாற வேண்டும். நில உரிமையாளர் என்பவர் நிலத்துக்கு மட்டுமே உரிமையாளரே தவிர, நிலத்தடி நீருக்கும் சேர்த்து உரிமையாளர் அல்ல என்ற புரிதல் நமக்குத் தேவை.
 • ஒரு பகுதியில் இருக்கும் இயற்கை வளத்தின் முதல் உரிமையாளராக அந்தப் பகுதி மக்களே இருக்க வேண்டும். இதை ஒரு அரசுச்சட்டமாக நாம் மாற்றவேண்டும்.
 •  எந்தவொரு சுற்றுச்சூழல் திட்டத்தையும்  நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சமூக தாக்க மதிப்பீடு ஆகிய இரண்டும் கட்டாயம். இவை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அல்லாமல், வல்லுநர்கள் (Experts) மற்றும் உள்ளூர் மக்களால் (Locals) செய்யப்பட வேண்டும்.
 • மக்களை விட பெரியவர் என்று எவரும் இல்லை. ஆகவே மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நாம் கருணையே காட்டக்கூடாது. அவர்களுக்கு மிக அதிகளவில் வரிகளையும் அபராதங்களையும் விதித்து, கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டில் சிக்குமானால், அதை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் கண்டிப்பாக குடிமக்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஊழலைத் தடுத்து, உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர இது உதவும்.
 • இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்வியலின் மகத்துவத்தை ஒரு தொல்குடி என்ற வகையில் தமிழர்களாகிய நாம் உணர வேண்டும். அந்த உணர்தலை அடுத்தத் தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.
 • சூழலியாளர்கள் குறைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் அவர்களின் உரிமைகளை காக்க வேண்டியது முக்கியம். இந்த விழிப்புணர்வை மக்களிடத்திலும் அரசு இயந்திரத் திடமும் கொண்டு செல்வதை, ‘கனவு தமிழ்நாடு இயக்கம்’ ஒரு தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கும்.
  “கனவு காண்பவர்கள் எல்லோரும் வெல்வதில்லை. கனவை வாழ்வாக மாற்றிக்கொள்பவர்களே வெல்கிறார்கள்.
  நாம் வெல்வோம்!”