தமிழ்நாடு குறித்த பெருங்கனவை சுமந்து களத்திற்கு வந்திருக்கும் சமூகப் பொருளாதார இயக்கம் தான் ‘கனவு தமிழ்நாடு (Dream Tamilnadu)’!
‘கனவு தமிழ்நாடு’ ஒரு தலைமையை மட்டும் கொண்டு இயங்கும் எளிய இயக்கம் அல்ல. இது ஒத்தக் கருத்துடைய தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள், சூழலியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டுத் தலைமைகளால் வழிநடத்தப்படும் மாபெரும் இயக்கம்.
‘கனவு தமிழ்நாடு’ முற்றிலும் சமூகநீதியை தூக்கிப்பிடிக்கும் இயக்கம். எனவே, கனவு தமிழ்நாட்டில் இணைந்து செயலாற்ற சாதி, மதம், இனம் என எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவராகவும் கனவு தமிழ்நாட்டின் 5 கருத்தியல்களில் மாற்றுக்கருத்து அற்றவராகவும் இருக்கவேண்டியது அவசியம்!
அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்காமல் இயக்கத்தின் எல்லா அங்கத்தினருக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறது கனவு தமிழ்நாடு இயக்கம். இதிலே, கடைக்கோடி பங்களிப்பாளர் கூட அறிவுச்செறிவுடனும் அவரது பங்களிப்புக்கு உரித்தான அதிகாரத்துடனும் இருப்பார். ஆகவே தலைமையை முடக்கிவிட்டால் கனவு தமிழ்நாடு இயக்கம் முடங்கிவிடாது. Simply, ‘Dream Tamilnadu’ is starfish. Not spider!
லாபநோக்கற்ற ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம் ‘கனவு தமிழ்நாடு’. ஆய்வுப்பூர்வமான தகவல்களை நடைமுறைக் கண்ணோட்டத்தோடு எடுத்துவைத்து முன்செல்வது கனவு தமிழ்நாடு இயக்கத்தவர்களின் தனிச்சிறப்பு!
கல்வியறிவு, தொழில்வளம், உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலை, இலக்கியம், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் என எல்லாவற்றிலும் உலகிலேயே தமிழ்நாட்டை ஒரு முன்னோடியாக மாற்றுவது தான் கனவு தமிழ்நாட்டின் தலையாய இலக்கு!