Dream Enablers
ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்கிற கனவு பலருக்கு உண்டு. ஆனால், வழிநடத்துபவர் இல்லாததால் பலரின் கனவு நனவாவதில்லை. இதனால் தொழில்முனைவு கனவுகள் தொடங்காமலேயே முடிந்துள்ளன. எனவே, தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, அவர்களை வளர்த்தெடுக்க உதவும் திட்டமே கனவு முனைவகம் (Dream Enablers).
சுழியத்தில் தொடங்கி ஒன்றை நோக்கி செல்லும் பயணத்தில் ஒரு தொழில்முனைவோருக்கு உறுதுணையாக இருக்கும் திட்டமே கனவு முனைவகம். கனவு முனைவகம் டிஜிட்டல் தளமாக இருக்கும். இதன் வழியே தொழிலை தொடங்கவும், வளர்த்தெடுக்கவும், அளவிடவும் முடியும். தத்தமது தொழிலில் பெரும் வெற்றி பெற்ற பல தொழில்முனைவோர்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.