leader-profile-image

ரகுராம் ராஜன்

 • உலகம் போற்றும் பொருளாதாரத் தமிழன்! புரிகிறது… அவர் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. சென்னைக்கு கூட இரண்டு அல்லது மூன்றுமுறை தான் வந்திருக்கிறார். ஆனாலும், இப்போது சென்று ‘வணக்கம் சார்… நல்லாயிருக்கீங்களா…’ என்று கேட்டாலும், ‘வணக்கம்… நல்லாயிருக்கேன்…’ என்று அழகாக தமிழில் உரையாடுவார், ரகுராம் ராஜன்! அவர் சார்ந்த சமுதாயத்தின் பிற்போக்குத்தனங்களைக் கூட, ரகுராம் ராஜன் எங்கும் வெளிப்படுத்தியதில்லை.
 • ரகுராம் ராஜன் ஒரு Perfect Academician! IIT-யில் பொருளாதாரம், IIM-மில் மேலாண்மை மற்றும் MIT-யில் முனைவர் பட்டம் என, படிப்பை தவமாகவே நினைத்து வாழ்ந்தவர். 1991ல், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பொருளியல் பேராசிரியாக, அவரது துறைசார் வாழ்க்கை தொடங்கியது. 1995ல் அதே சிகாகோ பல்கலைக்கழகத்தில் முழுநேர பேராசிரியராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. 2000க்கு பிறகு, தொடர்ச்சியான பொருளாதார ஆய்வுகளின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்தார், ரகுராம் ராஜன்!
 • 2005ம் ஆண்டு, ‘Has financial development made the world riskier?’ என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், ராஜன். அதில், ‘முன்னேற்றம் என்ற பெயரில் எடுத்துவரும் நடவடிக்கைகள், மிகப்பெரிய பொருளாதார ஆபத்தை விளைவிக்கப்போகின்றன’ என்று எச்சரித்தார். ஆனால், ராஜனின் குரல் கவனிக்கப்படவில்லை. அமெரிக்க பொருளியல் ஆய்வாளர் லாரன்ஸ் சம்மர்ஸ், ’He is a luddite. புதிய முன்னேற்றங்களைக் கண்டு அஞ்சுகிறார்’ என்று அவரை விமர்சித்தார். ஆனால், ராஜன் எச்சரித்தது போலவே, 2008ம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை உலகை ஆட்கொண்டது. வங்கிகள் திவாலாகின. நிறுவனங்கள் ஆட்குறைப்பை நோக்கி தள்ளப்பட்டன. எங்கும் ஒருவித நிலையாமை மக்களை அச்சப்படுத்தியது. உலக ஜிடிபி -5 என்ற நிலைக்கு சென்றது. உலக வேலைவாய்ப்பின்மை விகிதம் 10 சதவிகிதத்தை எட்டியது. 1930ல் நிகழ்ந்த ’The great Depression’ மறுவடிவத்தில் மீண்டும் வந்திருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் வருந்தி தலைகுனிந்தனர். ஆனால், ராஜன் அந்த சந்தர்ப்பத்தை ‘நான் அப்பவே சொன்னேன் பார்த்தீர்களா…’ என்று, சுயவிளம்பரம் தேடிக்கொள்ள பயன்படுத்தவில்லை. ‘சேர்ந்து தீர்வு காண்போம்…’ என்று எல்லோரையும் ஊக்கப்படுத்தினார். [Small info: 2010ம் ஆண்டு வெளிவந்த ‘Inside Job’ படத்தில், ’The 2008 meltdown was avoidable’ என்ற பதம் ரகுராம் ராஜனின் ஆய்வறிக்கையை மையப்படுத்தியே பயன்படுத்தப்பட்டது]
 • அடிப்படையில், அதிகாரிகளின் முழுபணிதலே அரசியல்வாதிகளை அடாவடி சட்டங்களை அமல் செய்யத் தூண்டுகிறது. ஆனால், எந்த சூழ்நிலையிலும் எந்த அரசியல்வாதிக்கும் முழுபணிதலை அளிக்க தயாராக இருந்ததில்லை ரகுராம் ராஜன். இந்தியாவின் எளிய மக்களை நிலைகுலைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ‘இவ்வளவு பெரிய பேரிடியை நம் நாட்டு மக்கள் தாங்கமாட்டார்கள’ என்று அதை நிராகரித்தார், ராஜன். பின்னர், அவர் பதவி விலகி உர்ஜித் படேல் வந்தபிறகு தான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசால் அமல்படுத்த முடிந்தது. 
 • ‘Dosanomics’ என்ற கோட்பாட்டை உருவாக்கியவர், ராஜனே! Dosanomics என்றால் வேறு ஒன்றும் இல்லை, Dosa Economics என்ற இரண்டு வார்த்தைகளின், சுருக்கப்பட்ட ஒற்றை வார்த்தை வடிவம். சரி… அதென்ன Dosa Economics? Simple… அதிகமான பணவீக்கம் மற்றும் வட்டி மதிப்புகளை விட, குறைவான பணவீக்கம் மற்றும் வட்டி மதிப்புகளே வாடிக்கையாளருக்கு அதிக பயனளிக்கும் என்பதே, Dosa Economics. இப்போது, நீங்கள் வைப்புநிதியில் ஒரு லட்சம் ரூபாயை 10 சதவிகித வட்டி விகிதத்தில், ஒரு வருடத்திற்கு டெபாசிட் செய்கிறீர்கள். வைப்புநிதி விதிமுறைகளின் படி, வருடக் கடைசியில் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரிட்டர்ன் அமவுண்ட் வரும். இதை வைத்து உங்களால் எத்தனை தோசைகளை வாங்க முடியும்? ஒரு தோசையின் விலை 55 ரூபாய் என்று கொள்ளுங்கள். உங்களால் 182 தோசைகளை வாங்க முடியும். அதே, பிரிசின்பல் அமவுண்டையும் சேர்த்தால், (அதுவும் உங்கள் பணம் தான்) 1818 தோசைகளை வாங்க முடியும். இது 10 சதவிகித வட்டி மதிப்பு மற்றும் 10 சதவிகித பணவீக்க மதிப்பின் அடிப்படையில் வாங்க முடியும் தோசைகளின் எண்ணிக்கை. இதே பணவீக்க மதிப்பு 5 சதவிகிதமாகவும், வட்டி மதிப்பு 8 சதவிகிதமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது தோசையின் விலை 55லிருந்து 52ஆக மாறிவிடும். ஆகவே, உங்களால் இப்போது ரிட்டர்ன் அமவுண்டை (8000 ரூபாய்) வைத்து 152 தோசைகளை வாங்க முடியும். ‘அட, 152யை விட 182 தானே பெரிது’ என நீங்கள் எண்ணலாம். ஆனால், பிரின்சிபல் அமவுண்டை பாருங்கள். அந்த ஒரு லட்ச ரூபாயில் உங்களால் 1923 தோசைகளை வாங்க முடியும். இப்போது கூட்டுங்கள்… 1923 + 152 = 2075 தோசைகள்.  இது 10 சதவிகித பணவீக்கம் மற்றும் வட்டி மதிப்பால் கிடைக்கும் தோசைகளின் எண்ணிக்கையான 2000-யை விட, 75 அதிகம் தானே! That’s Rajan!
 • பொருளாதாரத்தில் எண்கள் (Numbers) மிகவும் முக்கியமானவை. ஜிடிபியில் இருந்து டேக்ஸ் ரேட் வரை எல்லாமே எண்கள் அடிப்படையிலேயே மக்களின் மனதில் பதிகின்றன. எனவே, எண்களில் எப்போதும் கவனமாக இருப்பார், ரகுராம் ராஜன். ‘பொருளாதாரத்தில் ஒரு எண் திடீரென்று சரிகிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு புதிய எண் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் அல்லது ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று அர்த்தம். எனவே, திடீரென குறையும் எந்த எண்ணை வைத்து அச்சமடைந்து விடாதீர்கள்’ என்று சொல்வார், அவர்!
 • ஒரு தலைவனின் மரியாதை, அவனைச்சுற்றியிருப்பவர்களை அவன் எப்படி பார்த்துக்கொள்கிறான் என்பதிலேயே இருக்கிறது. ரகுராம் ராஜன் அந்த விதத்தில் ரிசர்வ் வங்கியின் மிகச்சிறந்த தலைவனாக இருந்தார் எனலாம். 20̀13 செப்டம்பர் முதல் 2016 செப்டம்பவர் வரை, அவர் அந்தப் பதவியில் இருந்தார். பதவிக்காலம் முடிந்ததும், ‘இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் அதிகமாக வருத்தப்பட்டது எதற்காக…’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு தகுந்த ஓய்வூதியத்தை என்னால் அரசிடம் இருந்து வாங்கிக்கொடுக்க முடியவில்லை என்பதே, எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது’ என்று அமைதியாக சொன்னார், ரகுராம் ராஜன்.
 • மூன்று ஆண்டுகள் என்பவை, எந்த ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் போதுமான பதவிக்காலம் அல்ல. ரகுராம் ராஜனுக்கு முன்னர் இருந்த பெரும்பாலான ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளேனும் பதவியில் இருந்திருக்கிறார்கள். ஆனாலும், ரகுராம் ராஜன் கிடைத்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு பங்காற்ற முடியுமோ, அவ்வளவு பங்கேற்றினார். அவரது முக்கியமான சாதனைகளென்று மூன்று விஷயங்களை பட்டியலிடலாம். 1. இந்தியாவின் பணவீக்கத்தை மிகப்பெரிய அளவில் குறைத்தார், ரகுராம் ராஜன். அவர் பதவியேற்ற 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் பணவீக்கம், 9.8 சதவிகிதமாக இருந்தது. அதே, 2015 ஜூலை மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 3.78 சதவிகிதம் அளவுக்கு கட்டுக்குள் வந்தது. 2. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை 30 சதவிகிதம் அளவுக்கு அதிகப்படுத்தினார், ரகுராம் ராஜன். அவர் பதவி விலகிய 2016ம் ஆண்டு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலர்கள்! 3. இரண்டு சர்வதேச வங்கிகள் மற்றும் பதினொரு மினி வங்கிகளுக்கு (கிட்டத்தட்ட மினி பஸ் போன்றவை) அனுமதியளித்தார், ராஜன். இதன் மூலம், இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதி மக்களுக்கு வங்கி சேவை விரிவடைந்தது.
 • இந்திய வரலாற்றில், பொதுவெளியில் அதிகமாக உரையாற்றிய ரிசர்வ் வங்கி ஆளுநரும் ரகுராம் ராஜன் தான். வாரம் ஒருமுறை அவர் மக்கள் மன்றத்தில் பொருளாதாரம் குறித்தும், நாட்டு முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இது அரசுக்கு ஒவ்வாமையை அளித்தது. ‘பொதுவெளிப் பேச்சை தவிருங்கள்’ என்று அவருக்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனால் ரகுராம் ராஜன், ‘நான் அரசுப் பணியாளன் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு மக்களின் சேவகன் என்பதும் உண்மை. என் துறையில் என்ன நடக்கிறது என்பதை, மக்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்…’ என்று நேர்மையாக சொன்னார். அந்தத் தருணத்தில் தான், ‘I am educating people…’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையையும் பயன்படுத்தினார், ரகுராம் ராஜன்.
 • இந்திய தொழில்துறையை ரகுராம் ராஜன் மிக நன்றாக புரிந்துவைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும். ‘உற்பத்தித்துறையில் இருக்கும் பல நிறுவனங்கள், ‘அதிகாரத்துவம் (Authoritarion)’ கொண்டவையாகவே இருக்கின்றன. ஆனால், சேவைத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் அப்படியிருக்கலாகாது. அவர்கள் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள்’ என்று சொன்னார், ரகுராம் ராஜன். அவரது காலத்தில், பி.எஸ்.என்.எல் போன்ற இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்காவிட்டாலும், முடிந்தவரை திவாலாகாத அளவுக்கேனும் இயங்கின.
 • பொதுவாக, அரசு அதிகாரிகள் மக்களை கட்டுப்படுத்தி ஆளும் மனப்பான்மையை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் சேவைகளின் மூலம் மக்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, வரையறுக்கப்பட்ட அரசுத்தேர்வுகளின் மூலம் மக்கள் பணிக்கு வருகிறார்கள். ஆனால், ராஜன் வித்தியாசமான ஒரு அரசு அதிகாரியாக பணிக்காலத்தில் வெளிப்பட்டார். ‘இந்தியா ஒரு ஒரு திறந்த, சுதந்திரமான சமூகம் (Open Society). இங்கே சகிப்புத்தன்மையே (Tolerance) எல்லாவற்றையும் விட முக்கியமானது’ என்று, பதவியில் இருக்கும்போதே அறிவித்து அதிரவைத்தார், ரகுராம் ராஜன். Here some info… ரகுராம் ராஜனுக்கு பிடித்த விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர். பிடித்த நடிகை டெப்ரா விங்கர். மிக முக்கியமாக, பிடித்த படம் ’தி கிரேட் டிக்டேட்டர்’! 
 • ‘I’m Raghuram Rajan. I do what I do’ என்பது, அவர் எப்போதும் பிறருக்கு சொல்ல விரும்பும் டையலாக்! அவரது பேச்சுக்களின் தொகுப்புகூட, ‘I do what I do’ என்ற தலைப்பிலேயே வெளிவந்தது. Yes, he do what he do. Always!