leader-profile-image

இளையராஜா

  • தமிழர்களின் இசைத்தாய்! இளையராஜாவின் இசை இல்லாமல் நல்லது, கெட்டது என எதுவுமே தமிழனுக்கு இல்லை!
  • ‘அம்மாவைப் பற்றி கவிதை எழுதுவதைப் போலத் தான், இளையாராஜாவின் இசையைப் பற்றி சொல்வதும்’ என்றொரு பதம் உண்டு. அது உண்மை! இசை என்றால் இளையராஜா, இளையராஜா என்றால் இசை!
  • இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். ஆரம்பகாலங்களில், அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இணைந்து கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்புறம் ஒரு தெய்வகணத்தில், சென்னைக்கு சென்று இசையமைப்பாளர் ஆனாலென்ன என்று அவருக்கு தோன்றியது. சென்னையில் பாரதிராஜாவின் அறையில் தங்கி தான் இளையராஜா சினிமா வாய்ப்புகளைத் தேடினார். அப்போது அன்னக்கிளி படத்துக்காக நல்ல இசையமை ப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தார், பஞ்சு அருணாச்சலம். அவர் கண்ணில் இளையராஜா பட்டார். அவர் காதில் இளையராஜாவின் இசை ஒலித்தது. ‘மச்சானைப் பாத்தீங்களா…’ பாடலின் முதல் இசைத்துணுக்கை கேட்டதுமே பஞ்சு எழுந்துவிட்டார். இளையராஜாவை அணைத்து, ’நீ இசை உலகை ஆளப்போகிறாய்… உன்னை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்’ என்று ஆரூடமும் சொல்லிவிட்டார். 1976 மே 14ம் தேதி, அன்னக்கிளி வெளிவந்தது. அன்று முதல் இன்று வரை, தமிழர்களை இசையால் தாலாட்டிக் கொண்டிருக் கிறார், நம் இளையராஜா!
  • இளையராஜாவுக்கு முன்னால் இங்கே இந்தி இசையே ஆதிக்கம் செலுத்திக் கொண் டிருந்தது.  மும்பையை விட சென்னையில் ஆராதானா ஆல்பம் அதிகம் விற்றது. ஆனால், இளையாராஜா அன்னக்கிளி என்ற ஒரே படத்தில் அதை உடைத்தார். காலைநேரக் காற்றின் ஈரப்பதத்தையும், மாலைநேரக் கடலின் மெல்லிதத்தையும் தமிழர்கள் ஒருசேர இளைய ராஜாவின் இசையில் உணர்ந்தார்கள். அப்புறம் அவர்களுக்கு ஆராதனாவெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லாமல் ஆனது!
  • இளையராஜாவின் ஒவ்வொரு பொழுதும் இசையில் தொடங்கி, இசையிலேயே முடியும். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார், அவர். ஒருநாளில் மூன்று படங்களுக்குக் கூட இசை ஆல்பங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். உலகளவில் இத்தகைய சாதனையை செய்த இசையமைப்பாளர்கள் வேறு யாரும் இல்லை.
  • உலகின் தலைச்சிறந்த ‘கம்போஸர்’களில் ஒருவர். ‘கம்போஸர்’ என்றால் காகிதத்தில் குறிப்புகள் எழுதி இசையை படைப்பவர்கள். இளையராஜாவின் அத்தனைப் பாடல்களுமே அப்படி குறிப்புகள் எழுதி உருவாக்கப்பட்டவையே. ஒரு பாடலுக்கு இசையமைப்பதற்கு முன்னால் அந்தப் பாடல் எப்படி வரவேண்டும் என்பதை, லாபியில் அமர்ந்து ஒரு பேனா, பேப்பரைக் கொண்டே இளையராஜா முடிவு செய்துவிடுவார். வரலாற்றில், பீத்தோவன், மொஸார்ட் மாதிரியான வெகுசிலரே இத்தகைய இசை ஞானத்தை கொண்டவர்களாக அறியப்படு கிறார்கள். அவர்களில் ஒருவர், இளையராஜா! Simply, A Maestro!
  • மொஸார்ட்டின் மிகப்பெரிய ரசிகர், இளையராஜா. ’Amedeus’ என்ற மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தின் கதையையும் காட்சிகளையும் இப்போது கேட்டால் கூட அப்படியே சொல்வார். அந்தப் படத்தின் இசைத்துணுக்குகளைப் பற்றி தனியொரு கருத்தரங்கமே நடத்தும் அளவுக்கு நமக்குத் தகவல்களும் கொடுப்பார்.
  • என்ன தான் தமிழ்த் திரையிசையின் என்றென்றைக்குமான அடையாளமாக இருந்தாலும், முன்னோடி இசையமைப்பாளர்களைக் கொண்டாட தவறாதவர். எம்.எஸ்.விஸ்வநாதனை ‘என்னுடைய பெரும் ஆதர்சம் அவர்’ என்று அவர் குறிப்பிடாத மேடைகளே இல்லை.
  • ஒவ்வொரு தமிழனுக்கும் முதலில் தாய், அடுத்து தமிழ், அதற்கடுத்து இளையராஜாவின் இசை!