leader-profile-image

வள்ளலார்

  • தமிழ்ச் சமூகத்தின் ஆன்மிகத் தந்தை. அன்பு, அறிவு, தயவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே அவரது ஆன்மிகம்.  அதில் வர்ணங்களுக்கோ, சாதிகளுக்கோ எந்த இடமும் இல்லை.
  • ஜீவகாருண்ய சீலர். “உன்னுயிர் போல உலக உயிர்கள் அனைத்தையும் நேசி” என்று அருட்பதம் சொன்னவர். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனும் வள்ளலார் வாக்கு, தமிழ் மண் எத்தனை சிறப்பானது என்பதை உலகுக்கு உணர்த்தக்கூடிய  உன்னத வாக்கு.
  • பசி ஆற்றலே உண்மையான ஆன்மிகத் தொண்டென வாழ்ந்தவர். “பசியினால் இளைத்தே வீடுதோர் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்” என்று மனம் வருந்திப் பாடியவர். வடலூரில் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்றும் ஆயிரம் பேருக்கு அன்றாடம் உணவளித்து கொண்டிருக்கிறது.
  • சிவசித்தர். நான் புதியவன் என் ஆன்மிகமும் புதியது என்று சொல்லாதவர். ஏற்கெனவே இங்கே இருக்கும் ஒரு மரபின் தொடர்ச்சியாக தன்னை முன்னிறுத்தியவர். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யான் ஒருவன்” என்று எழுதிச் சென்றவர். திருமூலர், தாயுமானவர் வழித்தோன்றலாக வரலாற்றில் நின்றவர்.
  • தமிழகத்தில் ஆன்மிகத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றி, அமைத்ததில் வள்ளலாருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அவரது `சத்திய ஞான சபை’ இன்று தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும்  முக்கியமான ஓர் அமைப்பு.