பங்காரு அடிகளார்
- ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆன்மிக உலகில் பெண்களையும் அதிகளவில் பங்கெடுக்க வைத்தவர்.
- பங்காரு அடிகளாரின் மேல்மருத்துவர் சித்தர் பீடம், பெண்களை மையப்படுத்தி ஒரு அமைப்பை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிதி வசூலிப்பதிலிருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை அங்கு எல்லோரும் பெண்களே.
- கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியதும் மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான்.
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது மிகப் பெரிய சமயப் புரட்சி.
- உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த மதகுரு அவர்.
- 30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர் மிகவும் பின்தங்கிய பகுதி. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருக்கிறது.