குன்றக்குடி அடிகளார்
- மிக இளம்வயதிலேயே துறவறம் பூண்டவர். திருவண்ணாமலை ஆதினம் அவரது காலத்தில் நிறைய சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
- தீவிர சனாதன மற்றும் சாதி எதிர்ப்பாளர். அவராலேயே திருவண்ணாமலை ஆதினம் இன்றும் ஒரு முற்போக்கு மத அமைப்பாக நீடிக்கிறது.
- பெரியாரின் மதம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை ஏற்காதவர். ஆனாலும் பெரியாரின் சமூக சீர்திருத்தப் பணிகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்.
- பெரியாருக்கும் குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே அழகிய நட்பு இருந்தது. திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை மிகவும் பாராட்டி, பேசினார் அடிகளார்.
- தமிழ்த் தொண்டர்! தமிழகக் கோயில்களில் தமிழ் வழிபாட்டுக்காகப் பெரிதும் உழைத்தவர். தமிழ் ஆட்சிமொழியாக உருவாகவும் குரல் கொடுத்தவர்.
- பெரும் பேச்சாளர். ஆன்மிகத்திலிருந்து அரசியல் வரை ஆழமாகப் பேசக்கூடியவர். “உயர்தரும நெறி உரைப்பார். ஆனாலும், கார்ல்மார்க்ஸை எடுத்துரைப்பார்” என்று அடிகளாரைப் போற்றுகிறார்கள் ஆய்வாளர்கள்.
- மடாதிபதிகள் கடல் தாண்டக் கூடாது என்ற விதியை உடைத்த அசாத்தியர். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என்று பயணித்து சமயம் மற்றும் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை உலக மக்கள் மனதில் விதைத்தவர்.
- பட்டணப்பிரவேசம் தாண்டி பாமரப் பிரவேசத்தையும் தொடங்கி வைத்தவர். குன்றக்குடி அடிகளாரைப் போல பாமர மக்களை நோக்கி அதிகளவில் பயணித்த இன்னொரு மடாதிபதி இங்கில்லை.
- அறிவியலை ஆராதித்த ஆன்மிகவாதி. “மாணவர்களுக்கு அறிவியல் கல்வி மிகவும் முக்கியம்” என்று எடுத்துச் சொன்னவர். “சந்திரனைப் பற்றிய அறிவியல் கோணம் இன்று வெளிப்பட்டிருக்கிறது. இனியும் நவகிரக வழிபாடு செய்யலாமா?” என்று கேட்ட பக்தி பகுத்தறிவர்.