Thanks for contacting us! We will be in touch with you shortly
புதுமைப்பித்தன்
சொ.விருத்தாசலம் எனும் பெயர்கொண்ட மிழ் சிறுகதைகளின் பிதாமகன் புதுமைப் பித்தன்.
மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான சிறுகதைகளை தமிழுக்கு அளித்தவர். `கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, `ஒருநாள் கழிந்தது’, `மனித யந்திரம்’, `காஞ்சனை’, `பொன்னகரம்’ உள்ளிட்டவை காலங்கள் பல கடந்தும் பேசப்படுவை.
பிராமணிய பாஷை நிறைந்திருந்த எழுத்துலகில் சென்னை, தஞ்சாவூர் தாண்டிய வட்டார மொழிகளில் எழுதிய முன்னோடி.
ஷேக்ஸ்பியர், மாக்ஸிம் கார்க்கி போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழுக்கு மொழிப்பெயர்த்தவர்.
இன்று இலக்கிய விமர்சனம் செய்பவர்களுக்கு எல்லாம் முன்னோடி யார் என்றால் அது புதுமைப்பித்தனே. கூர்மையான விமர்சன பார்வை கொண்டவர் என்பதால் இலக்கிய உலகம் அவரை மிகவும் சோதித்தது. வழக்கம்போல இலக்கியத்திலிருந்து சினிமா பக்கம் சென்றவர் அங்கு பல சோதனைகளைச் சந்தித்தார். மிகக் குறுகிய வயதிலேயே மரணம் அவரைத் தழுவிக்கொண்டாலும் இன்றும் புதுமைப்பித்தனின் கதைகள் சாகாவரம் பெற்றவை.