கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்
- தமிழக கிரிக்கெட்டின் அடையாளம், ஶ்ரீகாந்த்! களத்துக்கு உள்ளே மட்டுமல்ல, களத்துக்கு வெளியேயும் அவரது எனர்ஜி, வேற லெவலில் இருக்கும்!
- 1983ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வெல்ல மிகமுக்கிய காரணமாக இருந்தவர், நம் ஶ்ரீகாந்த்! இறுதிப்போட்டியில் அவர் அடித்த 38 ரன்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
- இந்தியா இதுவரை எத்தனையோ திறமையான கிரிக்கெட்டர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், அதில் ஶ்ரீகாந்த் வித்தியாசமானவர். எப்போதும் ரசிகர்களை ஒருவித பதற்ற த்திலேயே வைத்திருப்பார். நாம் ‘அட்டாக்’ செய்வார் என்று எதிர்பார்க்கும் போது ‘ஸ்ட்ரோக்’ வைப்பார். நாம் ‘ஸ்ட்ரோக்’ வைப்பார் என்று எதிர்பார்க்கும் போது, ‘அட்டாக்’ செய்வார். மேற்கிந்திய தீவுகளின் அதிஅபாய வேகவீச்சாளர்களை ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொண்ட மிகச்சில தீரர்களில் ஶ்ரீகாந்தும் ஒருவர்.
- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் தமிழர் ஶ்ரீகாந்த்! 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் இந்திய அணியை தலைமை தாங்கினார்!
- இந்தியாவுக்காக 43 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் ஶ்ரீகாந்த். இரண்டு ஃபார்மேட்களிலுமே ஒரு வெற்றிகரமான வீரராக அவர் திகழ்ந்தார்.
- ஶ்ரீகாந்த் – கவாஸ்கரும் 1980களில் இந்தியாவின் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்கார ஜோடியாக அறியப்பட்டார்கள். கவாஸ்கர் நீர் என்றால், ஶ்ரீகாந்த் நெருப்பு!
- திலீப் வெங்சர்காருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவராக 2008ம் ஆண்டு ஶ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் தான், இந்தியா தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்றது.
- ஶ்ரீகாந்த் இப்போது தமிழகத்தின் முக்கியமான கிரிக்கெட் வர்ணனையாளர். அவரது வர்ணனையைக் கேட்பதற்கென்று தனியொரு ரசிகர் கூட்டமும் உருவாகியிருக்கிறது. அதிலும், அவரது பாணி தடாலடி தான்!