நரைன் கார்த்திக்கேயன்
- ‘கார்’த்திக்கேயன்! கார் பந்தயத்தை இந்தியாவில ஒரு பேசுபொருளாக மாற்றிய தமிழன்! Formula One பந்தயத்தில் கலந்துகொண்ட முதல் இந்தியர்!
- இப்போது எத்தனையோ தமிழக இளைஞர்கள் கார் பந்தயத்தில் கலக்குகிறார்கள். ஆனால், ‘விதை’ நரைன் போட்டது!
- விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட விளையாட்டு வீரரும் நரைன் தான்! அவர், கையில் ஹெல்மெட்டை பிடித்தபடி ரேஸிங் சூட்டுடன் நிற்கும் ஒரு புகைப்படம் உண்டு. தமிழக சூழலில், அது நாசா எடுத்த நீல் ஆம்ஸ்ட்ராங் புகைப் படத்துக்கு இணையானது !
- கார் பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு. ஆனால், அதற்காக அதில் ஆபத்து இல்லை என்று சொல்லமுடியாது. போஸ்ட்டை இடித்து கீழே விழுதல், சூடு தாங்காமல் கார் பற்றியெரிதல் எல்லாம் அங்கே சகஜம். ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டுத்தான் உள்ளேயே அனுப்புவார்கள். என்ன தான் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டாலும, அது உயிருக்கு 100 சதவிகித உத்தரவாதத்தை அளிக்காது. ஆனால், ’Speed thrills me’ என்று அறிவித்துவிட்டு களத்தில் குதித்தார், நரைன்.
- ஷூமேக்கரும் பேரிசெல்லோவும் தான் நரைனின் ஆதர்சங்கள். இருவருமே ரேஸிங் உலகை பல ஆண்டுகள் ஆண்ட பெருந்தலைகள்!
- ‘Commitment and Dedication’… இது தான் நரைன் எப்போதும் உச்சரிக்கும் வார்த்தைகள். ‘அது இருந்தால் போதும். உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ என்று சொல்வார்.
- நரைனைப் பொறுத்தவரை வயது என்பது வெறும் நெம்பர் தான். இப்போது அவருக்கு வயது 43. ஆனால், 2020ல் நடக்கும் ’European le man’ தொடரில் பங்கேற்பதை அவரது முக்கிய இலக்குகளில் ஒன்றாக கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு மாற்றம் மட்டும் தான் நடந்திருக்கிறது. அதாவது, ’Singlen seat’ காரில் இருந்து ’Sports’ காருக்கு மாறியிருக்கிறார், நரைன்!
- இளம் வீரர்களை பாராட்டி கைதூக்கிவிடுவதில் ஆர்வம் கொண்டவர் நரைன். இந்தியாவின் அடுத்த மிகமுக்கியமான ரேஸராக ஜேகன் தருவாலா வருவார் என அவர் கணித்திருக்கிறார்!