leader-profile-image

விஸ்வநாதன் ஆனந்த்

  • அறுபத்தி நான்கு கட்ட விளையாட்டின் அசைக்க முடியா அசுரன், விஸ்வநாதன் ஆனந்த்! இதுவரை ஐந்து உலக சாம்பியன் பட்டங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்திருப்பவர்!
  • அடிப்படையில் சதுரங்க விளையாட்டு நிறையப் பொறுமையையும் கவனக்குவிப்பையும் கோருவது. காட்டில் கரும்புலி ஒன்றின் தரிசனத்துக்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் ஒரு புகைப்பட நிபுணனின் அர்ப்பணிப்பு, ஒரு சதுரங்க விளையாட்டு வீரனுக்கு வேண்டும். விஸ்வநாதன் ஆனந்திடம் அந்த அர்ப்பணிப்பு நிறையவே இருந்தது, இருக்கிறது!
  • இப்போது ரமேஷ் பிரக்னனந்தாவில் இருந்து குகேஷ் வரை நிறைய கிராண்ட் மாஸ்டர்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால், இதற்கெல்லாம் விதை விஸ்வநாதன் ஆனந்த் போட்டது! இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ‘விஷி’யே! 1988 ஆம் ஆண்டு அவர் அந்தப் பட்டத்தை வென்றார்!
  • உலகில் 2800 Elo புள்ளிகளை கடந்த சதுரங்க வீரர்கள் வெகுசிலரே இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் நம் விஸ்வநாதன் ஆனந்த்!
  • தமிழகத்தில் இருந்து சர்வதேச தளத்திற்கு நாம் அனுப்பிய முதல் விளையாட்டு வீரரும் விஸ்வநாதன் ஆனந்த் தான். அவர் உலக அரங்கில் பரிசுகள் வாங்கிய போதெல்லாம், தமிழகத்தின் பெயரும் சேர்ந்து உச்சரிக்கப்பட்டது. 
  • விஸ்வநாதன் ஆனந்துக்கு 1985 ஆம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் வந்து சேர்ந்தது. 2008 ஆம் ஆண்டு பத்ம விபூஷணையும் அவர் அடைந்தார். 
  • விஸ்வநாதன் ஆனந்தை 2012 ஆம் ஆண்டான் ‘Indian of the year’ ஆக தேர்ந்தெடுத்து கொண்டாடியது CNN. இந்தப் பெருமையைப் பெற்ற முதல் தமிழக விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்!
  • கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அப்படி சதுரங்கத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த். கிட்டத்தட்ட சதுரங்க விளையாட்டின் கடவுள்!