leader-profile-image

ஆர். பாலகிருஷ்ணன்

ஒரு அரசு அதிகாரி நல்ல வரலாற்றாளராகவும் , மொழிப் பற்றாளராகவும்கூடவேநிறைந்த பண்பாளராகவும் அமைவது அபூர்வம்ஆர்பாலகிருஷ்ணன் அத்தகைய அபூர்வர்!

1958ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிறந்தார்பாலகிருஷ்ணன்இளவயது முதலே ஒரு இனிமையான நண்பனென தமிழார்வம் அவரைப் பின் தொடர்ந்ததுஎனவேபள்ளிப்படிப்பை முடித்ததும்தமிழ் இலக்கியத்தில் சேர்ந்தார்அப்புறம்காமராஜரின் பேச்சைக்கேட்டு உந்துதல் பெற்று, 1984ம் ஆண்டு ஆட்சிப்பணி அதிகாரியாக மாறினார்ஒன்று தெரியுமாதமிழ்நாட்டில் இருந்து முதன்முதலாக தமிழ்வழியில் தேர்வு எழுதி ஆட்சிப்பணிக்கு சென்ற முதல் நபர்ஆர்பாலகிருஷ்ணன் தான்!

பாலகிருஷ்ணனுக்கு தமிழின் மீது இருப்பது பற்று அல்லஅதையும் தாண்டி ஒரு பெருமைஅவர் ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ‘நீங்கள் தமிழ் மாணவர் என முதலமைச்சரிடம் சொல்லி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினால்உங்களுக்கு தமிழ்நாட்டிலேயே போஸ்டிங் கிடைக்கும்’ என்றுசிலர் சொல்கிறார்கள்ஆனால், ‘தமிழ் மாணவன் என்ற அடையாளத்தை வைத்து நான் சலுகை வாங்கினால்அது என் தமிழுக்கு பெரிய இலக்காகும்’ என்று சொல்லிஉறுதியாக மறுத்துவிடுகிறார் பாலகிருஷ்ணன்.

தமிழின் மீதும்தமிழ்நாட்டின் மீதும் அளவில்லா பெருமை கொண்டவராக இருந்தாலும்இந்தியாவையும் விட்டுக்கொடுக்காத தன்மை கொண்டவர்பாலகிருஷ்ணன்எனவே தான், ‘உங்களுக்கு ஒடிஷாவில் போஸ்டிங் சார்…’ என்று சொன்னபோதுஅவரிடம் எந்த வருத்தமும் எழவில்லை. ‘எங்கு என்றால் என்னஇந்திய மக்களுக்கு தானே பணியாற்றுகிறேன்’ என்று அழகாக சிரித்துவிட்டுஒடிஷாவை நோக்கி புறப்பட்டார்பாலகிருஷ்ணன்.

ஒடிஷாவின் முன்னேற்றத்துக்காக நிறைய உழைத்தவர்உழைப்பவர் பாலகிருஷ்ணன். Pls note it… பாலகிருஷ்ணன் தலைமைச்செயலளாராக இருந்த காலத்தில் தான் ஒடிய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டதுஒடிஷாவின் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பயிற்சியளிக்கும் ‘Knowledge Hub’ – யையும் பாலகிருஷ்ணன் துணைநின்று உருவாக்கினார்உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள்ஆசிய தடகள போட்டிகள் என வரிசையாக விளையாட்டுப்போட்டிகளை ஒடிஸா நடத்தவும்பாலகிருஷ்ணனின் பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம்ஒடிஷாவின் பண்பாட்டை ஆவணப்படுத்தும் வகையில் அவர் அணி உருவாக்கிய டிஜிட்டல் லைப்ரரி , உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றுஇப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்பாலகிருஷ்ணன் இப்போது ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சிறப்பு ஆலோசகராக இருக்கிறார்இது அவரது பதவிர்காலம் முடிந்தபிறகு அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புப்பதவி.

ஆர்.பாலகிருஷ்ணனின் திராவிடவியல் ஆய்வுகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம்சமீப ஆண்டுகளில்சிந்துவெளி நாகரிகத்தை தமிழ் நாகரிகத்தோடு தொடர்புபடுத்தும் ஆவணங்களைபாலகிருஷ்ணன் அளவுக்கு அளித்தவர்கள் யாருமில்லை. ’இந்தியவியலின் இரண்டு பெரிய புதிர்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் தமிழ் தொன்ம மரபுஇரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்லஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக கருதப்பட வேண்டியவைஉண்மையில்சிந்துவெளி நாகரிகம் விட்ட இடத்தில் இருந்து தான்தமிழின் சங்க இலக்கியங்கள் ஆரம்பிக்கின்றன’ என்ற அவரது கூற்றுக்கள்தமிழக வரலாற்றியலின் மைல்கல்கள்!

சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே தமிழ் நாகரிகம் என்ற கோட்பாட்டுக்கு ஆர்.பாலகிருஷ்ணன் அளிக்கும் ஆதாரங்களும்அசைக்க முடியாதவை. ‘சிந்துவெளியைப் போலவே தமிழின் சங்க இலக்கியமும் துணைக்கண்டக் கூறுகளை கொண்டிருக்கிறதுசிந்துவெளியைப் போலவேதமிழ்ச் சமூகமும் பன்மைத்துவத்தை பேணிய சமூகம் (Cosmopolitanism based society); சிந்துவெளியும் தமிழ்நிலமும்திணைக்கோட்பாடுகள் (Landscape specific pattern of life) கொண்ட தனித்த நாகரிங்கள்’ போன்ற தகவல்களெல்லாம்மிகப்பெரிய ஆய்வுகளுக்குப் பிறகு பாலகிருஷ்ணன் வெளியிட்டவைகீழடி மற்றும் சிந்துவெளி கட்டுமானங்களின் ஒற்றுமைத்தன்மையையும் (கட்டிடங்களின் இடைவெளிசெங்கற்களின் அளவு போன்றவை), பாலகிருஷ்ணன் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

பெயர் ஆராய்ச்சி’ பாலகிருஷ்ணனின் முக்கியமான இயங்குதளம்அவரது தமிழ் ஆர்வமே கூட பெயர் ஆராய்ச்சியில் இருந்து உருபெற்ற ஒன்றே! ’சங்கம் என்பது தமிழ்ச்சொல்லாகபாடபுரம் என்கிறார்களேஇது தமிழ்ப்பெயராஆட்டநத்திதித்தன்திதியன் போன்ற பெயர்களின் பின்னணி என்னவாக இருக்கும்’ போன்ற வினாக்களைப் பின் தொடர்ந்து வந்தேஅவர் வரலாற்றாய்வாளராக மாறுகிறார்.

இந்திய சமூகம் அடிப்படையில் ஒரு பழங்குடிச் சமூகம்அதன் அடையாளமாக என்றும் பெயரே இருந்து வந்திருக்கிறதுஆகவேபெயரை பின் தொடர்ந்து சென்றால்இந்தியாவின் அரசியலையே கூட நம்மால் புரிந்துகொள்ள முடியும்இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர்பாலகிருஷ்ணன்இந்திய பழங்குடிச் சமூகங்களில் நிலவிய, ‘Calling Name, Secret Name’ என்ற கருத்துருவாக்கங்களைபாலகிருஷ்ணனே முதன்முதலில் பொதுவெளியில் வெளிப்படுத்தினார்அவரது, ‘பெயர் சாதாணமானது அல்லஎது ஒன்றுக்கு நாம் பெயர் வைக்கிறோமோஅதன் முழுக்கட்டுப்பாடும் நமக்கு வந்துவிடுகிறதுஆகவேபெயருக்குப் பின்னால் பெயருக்கு இருப்பது ஒரு உரிமை கொண்டாடும் தன்மை’ என்ற கருத்துபெயரைக்குறித்து இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளிலேயே மிகச்சிறந்த கருத்து எனலாம்.

வரலாற்றைப் பொறுத்தவரை அறுதியிடப்பட்ட உண்மை (Eternal Truth) என்று எதுவும் கிடையாதுஆராய்ச்சி செய்தால் உண்மைகளை தோண்டிச்சென்று இன்னும் புதிய உண்மைகளை கண்டறிய முடியும்’ என்பதுபாலகிருஷ்ணன் நம்பும் கருதுகோள்.

பிடித்ததை விடாதீர்கள்பிடிக்காததை தடாதீர்கள்’ என்பது தான்ஆர்.பாலகிருஷ்ணன் பின்பற்றும் வாழ்க்கைக்கொள்கை. ‘பிடித்தைச் செய்பவனே உயர்ந்த செல்வந்தன்எனக்கு சென்னையில் பாதியைக் கொடுப்பதாக சொன்னாலும்நான் என்னுடைய ஆய்வுப்பணிகளிலேயே மகிழ்ச்சியடைகிறேன…’ என்று அவர் சென்னை கிறித்துவக்கல்லூரியில் சொன்னபோதுகைதட்டல்களால் அதிர்ந்தது அரங்கம்!