




ரவிச்சந்திரன் அஸ்வின்
- தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவர்களில் அதிகம் சாதித்தவர் அஸ்வின் தான்!
- இந்தியாவுக்காக டெஸ்ட்டில் 365 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார், அஸ்வின்.
- அனில் கும்ப்ளே, ஹர்பஜனுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த ஒரு வெற்றிகரமான ஸ்பின்னர், அஸ்வின்.
- அனில் கும்ப்ளே ‘ஸ்பின்’ என்ற பெயரில் ‘மீடியஸ் பேஸ்’ போட்டு விக்கெட்டை வீழ்த்துவார். ஹர்பஜன் ‘தூஸ்ரா’வை அதிகம் பயன்படுத்துவார். ஆனால், அஸ்வினுக்கு ‘கேரம் பால்’ தான் ஃபேவரைட். ஆஃப் ஸ்பின் போடுவதைப் போல அசைவு காட்டிவிட்டு, அப்படியே லெக் ஸ்பின்னை வீசுவது தான் கேரம் பால். அஸ்வில் அதில் எக்ஸ்பெர்ட்!
- டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக விரைவில் 350 விக்கெட்டுகளை எட்டியவர் என்ற பெருமை அஸ்வினுக்கு உண்டு! இதே வேகத்தில் போனால் அவருக்கு அதிவேக 500 விக்கெட்டுகளும் கூட சாத்தியம்!
- அஸ்வின் டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்தபோது, ‘இவருக்கு பேட்டிங்கும் வருமா…’என்று ஆச்சர்யப்பட்டவர்கள் அதிகம். உண்மையில், அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு பேட்ஸ்மேனாகத் தான் தொடங்கினார். இந்தியாவின் U17 அணிக்கு அவர் தான் நெடுநாள் தொடக்க ஆட்டக்காரர். ஆனால், அப்புறம் அவரது கவனம் பவுலிங்கின் பக்கம் திரும்பியது. அஸ்வினின் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை ரீபிளேஸ் செய்து அறிமுகமானவர் தான், ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மா!
- ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார், அஸ்வின். அவரது தலைமையில் பஞ்சாப் அணி நிறைய வெற்றிகளைக் கண்டது.
- அடுத்தகட்டமாக விளையாட்டு சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் களமிறங்கியிருக்கிறார், அஸ்வின். அவரது ‘ஆட்டத்துக்கு ரெடியா?’ நிகழ்ச்சி ஜூன் மாதம் முதல் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
- 2016ம் ஆண்டு அஸ்வினுக்கு ‘Cricketer of the year’ அளித்து கவுரவித்தது ஐசிசி.