leader-profile-image

சத்தியன் ஞானசேகரன்

  • இந்திய டேபிள் டென்னிஸின் இளம் அடையாளம் சத்தியம் ஞானசேகரன். உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதல் 25 இடத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த முதல் இந்தியர்!
  • சரத் கமலுக்குப் பிறகு அதிகம் கவனிக்கப்பட்ட தமிழக டேபிள் டென்னிஸ் வீரராகவும் சத்தியன் ஞானசேகரன் அறியப்படுகிறார். சரத் கமலின் பாணி கொஞ்சம் அதிரடியானது. ஆனால், சத்தியன் நிதானமாக எதிராளியை எதிர்கொள்வதில் ஸ்பெஷலிஸ்ட்!
  • ஜப்பானின் டி – லீக் (T – League) கில் பங்கேற்கும் ’Okayama Rivets’ கிளப் அணிக்கு தேர்வான முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் தான். அந்த லீக் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு லீக்காக உருமாறியிருக்கிறது!
  • 2018 காமன்வெல்த் மற்றும் 2019 ஆசிய போட்டிகளின் போது, சத்தியன் வேற லெவல் ஃபாரில் இருந்தார். உலகின் 5-ம் நிலை வீரரான ஜப்பானின் Harimoto Tomokazu வை அவர் வீழ்த்தியதும் அந்த தருணங்களில் தான். 
  • தமிழக டேபிள் டென்னிஸை சரத் கமல் தான் பத்தாண்டுகளுக்கும் மேலாக தூக்கி சுமந்தார். இப்போது அவருக்கு உறுதுணையாக இருக்க, அவரது சுமையைப் பகிர்ந்து கொள்பவராக களத்துக்கு வந்திருக்கிறார், சத்தியன் ஞானசேகரன்!
  • 2018 ஆம் ஆண்டு சத்தியன் ஞானசேகரனுக்கு அர்ஜூனா விருது அளித்தது இந்திய அரசு.