leader-profile-image

தமிழ்மகன்

  • தமிழ் இலக்கிய உலகின் ஜஶனியர் சுஜாதா. வெகுஜன வாசகர்களின் ரசனையை அறிந்து எல்லாக் களத்திலும் நின்று, விளையாடும் எழுத்தாளர் தமிழ்மகன்.
  • இளைஞர் ஆண்டையொட்டி, 1984-ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ நாவல் முதல் பரிசு பெற்றது. அப்போது தமிழ்மகனின் வயது 21-க்குள். 
  • ‘மானுடப் பண்ணை’, ‘சொல்லித் தந்த பூமி’ , ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’, வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி, ஆபரேஷன் நோவா, தாரகை, வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள், நான் ரம்யாவாக இருக்கிறேன், படைவீடு ஆகிய நாவல்களும் ‘எட்டாயிரம் தலைமுறை’ , ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’, `மீன்மலர்’, மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், தமிழ்மகன் சிறுகதைகள் ஆகிய சிறுகதை தொகுப்புகளும் திரைப் பிரமுகர்களின் அரிய செய்திகளைச் சொல்லும் `செல்லுலாய்ட் சித்திரங்கள்’  வெளிவந்துள்ளன.
  • இலக்கியப் பணிகளுக்காக 2014-ம் ஆண்டுக்கான பெரியார் விருது பெற்றவர். தமிழக அரசு விருது, ஆனந்த விகடன் விருது, சுஜாதா அறக்கட்டளை விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
  • எழுத்தாளர்களுக்குப் பிடித்த எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் அரிது. அந்த அரிதான இடத்தைப் பிடித்திருப்பவர் தமிழ்மகன். 
  • “சிவகாமியின் சபதம் கதையின் சுருக்கம் என்னவென்று கேட்டால் அரைப்பக்கத்தில் எழுதிவிட முடியும். வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலின் சுருக்கம் கேட்டால் 185 பக்கங்களுக்கு எழுத வேண்டியிருக்கும் ஏனென்றால் அந்த நாவலின் முழு பக்க அளவு அதுதான். அதற்கு மேல் அதைச் சுருக்க முடியாது’’ என்று இவர் எழுதிய வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலைப் பற்றி கூறுகிறார் பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.
  • `ஆபரேஷன் நோவா’ என்ற அறிவியல் புனைகதை ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளி வந்து பலரின் கவனத்தைப் பெற்றது. இந்த தொடர்கதையில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறினால் என்னவெல்லாம் நடக்கும் என்று இவர் முன்பே கணித்து, எழுதிய தீர்க்கதரிசி.
  • சென்னையின் மகத்துவம் அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இவர் எழுதிய ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’  என்ற கட்டுரைத் தொகுப்பு சிறந்த ஆவணம்.
  • ஒவ்வொரு படைப்புக்கும் அதிகம் மெனக்கெடுவார். நீண்ட பயணங்கள், ஆய்வுகள், தரவுகள் என ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு  முழு ஈடுபாட்டோடு ஒவ்வொரு நாவலையும் எழுதுவார். படைவீடு நாவல் சாதிகளின் உருவாக்கம் அவை எப்படிக் கட்டிக் காப்பாற்றப்படுகின்றன என்பதை 14-ம் நூற்றாண்டின் பின்னணியோடு பேசுகிறது.