leader-profile-image

அசோகமித்ரன்

  • பெண்களின் அகவுலகத்தை தனது கதைகளில் உலவவிட்டவர். மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளை, துயரங்களை, வாழ்வின் அவலத்தை தனது கதைகளில் எளிமையான நடையில் வலிமையாக சொன்ன எழுத்தாளர்.
  • சினிமாவுக்குள் நுழையத் துடிக்கும் ஒவ்வொருவரும் அவருடைய கரைந்த நிழல்கள் நாவலைப் படிக்க வேண்டும். திரைப்படத் துறையின் யாரும் சொல்லாத அதன் அசல் முகத்தை முதலில் தோலுரித்து காட்டியவர்.
  • சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதிய அசோகமித்ரன், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டியோவில் கணக்கராக பல வருடங்கள் பணியாற்றியவர். மறைந்த பத்திரிகையாளரும் நாடகாசிரியருமான ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவின் நாடகங்கள் மற்றும் குறும்படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.
  • வாழ்வின் பெரும்பகுதியில் சென்னையை சைக்கிளால் சுற்றி வந்து, அறிந்தவர்.  அந்த  தெருக்கள் குறித்து அவர் எழுதியவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அசோகமித்ரனின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று `புலிக்கலைஞன்’. இன்றும் பலரால் விவாதிக்கப்பட்டும், எழுதப்பட்டும் வரும் இந்த படைப்பு காலத்தால் அழியாதது. அழிக்க முடியாத ஒன்றும் கூட.
  • இலக்கிய உலகில் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிப்புக்கு உள்ளான கலைஞன். `எழுதி, வாழ்க்கையை வெல்ல முடியாது. ஆனால்,மானுட மனங்களை வெல்லலாம்’ என்பதற்கு உதாரண புருஷர் அசோகமித்ரன்.