சா. கந்தசாமி
- ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர் சா.கந்தசாமி. வெகுசன இதழ்களால் செய்ய முடியாத தீவிர இலக்கியச் செயல்பாடுகளை `கசடதபற’ சிற்றிதழ் வழியே நிகழ்த்திக் காட்டிய நவீன தமிழ் இலக்கியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்.
- இலக்கியத்தைத் தாண்டி ஆவணப்படம், சுடுமண் சிற்பங்கள், நுண்கலைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவர். ஏராளமான நாவல்களை எழுதியிருந்தாலும் `சாயாவனம்’, `விசாரணைக் கமிஷன்’, `தக்கையின் மீது நான்கு கண்கள்’ உள்ளிட்ட நாவல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. அவை குறும்படங்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
- “நேரு, பெரியார், உ.வே.சா. போன்றோரின் எழுத்துக்களை வாசித்ததாலேயே எழுத வந்தேன்” என கூறிய சா.கந்தசாமி, தன் இறுதிக் காலம் வரை தீவிர இலக்கிய செயல்பாடுகளைக் கொண்டிருந்தவர். அவரது படைப்புகள் இலக்கிய உலகுக்கு ஒரு பெருங்கொடை.