leader-profile-image

ஜெயமோகன்

  • இலக்கிய உலகின் சர்ச்சை நாயகன் ஜெயமோகன். இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை எனக்கு வேண்டாம் என மறுத்தவர். 
  • இலக்கிய உலகில் பெரும் வாசகர்களை பெற்றிருக்கும் எழுத்தாளர். இவரது வாசகர்களால் நடத்தப்படும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் அளித்து, கெளரவித்து வருகிறது.
  • இலக்கிய ஆர்வலர்களால் ஆசான் என கொண்டாடப்படுபவர். மகாபாரதத்தை இவர் வெண்முரசு எனும் தலைப்பில் எழுதி வருகிறார். அதன் முதல் பிரதி வெளியிட்டில் திரண்டிருந்த கூட்டம் இலக்கிய உலகம் அதுவரை அறியாதது. பெரும் வாசகர் பரப்பை இலக்கியத்தின் பக்கம் நகர்த்திக் கொண்டு வந்ததில் ஜெமோவுக்கும் முக்கிய இடம் உண்டு. 
  • `ரப்பர்’, `விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’, ‘ஏழாம் உலகம்’, ‘வெள்ளையானை’ என அவர் எழுதும் நாவல்கள் சர்ச்சை ரகம். இடதுசாரிகளின் ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்தது அவர் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல்’.